மொத்த ஆர்டர் ஒத்த போனுக்கு.. ரூ.2,000 ஆஃபர் விலையில் 8000mAhபேட்டரி OnePlus ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 (OnePlus Nord CE6) ஸ்மார்ட்போனின் விற்பனை தள்ளுபடியுடன் தொடங்கி இருக்கிறது. 8000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, ஓம்னிவிஷன் கேமரா உள்ளிட்ட பீச்சர்களுடன் கிடைக்கும் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை பார்க்கலாம்.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.29,998ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.32,998ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.2,000 தள்ளுபடி போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.27,998 விலைக்கு வாங்கி கொள்ளலாம். ஃப்ரஷ் ப்ளூ (Fresh Blue), லூனார் பேர்ல் (Lunar Pearl) மற்றும் பிட்ச் பிளாக் (Pitch Black) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 அம்சங்கள் (OnePlus Nord CE6 Specifications): ஆக்டா கோர் ஸ்னார்டிராகன் 7எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 4 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 2772 x 1272 பிக்சல்களுடன் 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.
மேலும், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் கிரிஸ்டல் குவார்டு கிளாஸ் (Crystal Guard Glass) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) கிடைக்கிறது. எப்/1.8 அபெர்சர், ஓஐஎஸ் டெக்னாலஜி மற்றும் ஓம்னிவிஷன் ஓவி50டி40 (OmniVision OV50D40) சென்சாருடன் 50 எம்பி பிரைமரி கேமரா கிடைக்கிறது.
இதில் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. மேலும், எப்/2.4 அபெர்சருடன் 2 எம்பி மோனோகுரோம் கேமரா கிடைக்கிறது. முன்பக்கத்தில் கேலக்ஸிகோர் ஜிசி32இ2 (Galaxycore GC32E2) சென்சாருடன் 32 எம்பி கேமரா கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) கொண்ட 8000mAh பேட்டரி கிடைக்கிறது. 27W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது.
இந்த பேட்டரியுடன் 8.5 எம்எம் தடிமன் மற்றும் 215 கிராம் எடை கொடுக்கிறது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சாரை (Infrared Sensor) இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கப்பட்டு இருக்கின்றன. MIL-STD-810H சர்டிபிகேஷன் வருகிறது.
இதில் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது. ஐபி66 ரேட்டிங், ஐபி68 ரேட்டிங் மற்றும் ஐபி69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஐபி69கே ரேட்டிங்கும் கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4), ஜிபிஎஸ் (GPS), குளோனாஸ் (GLONASS), பிடிஎஸ் (BDS), கலிலியோ (Galileo) உள்ளிட்ட கனெக்டிவிட்டிகள் உள்ளன.


Click it and Unblock the Notifications