நாளை இந்தியாவில் அறிமுகமாகும் புதிய OnePlus போன்கள்.. 8000mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 (OnePlus Nord CE6) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் (OnePlus Nord CE6 Lite) ஸ்மார்ட்போன்கள் நாளை (மே 7) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் நாளை மதியம் 12 மணி அளவில் அறிமுகமாகும். அதேபோல் அமேசான் தளத்தில் இந்த போன்கள் விற்பனைக்கு வரும். மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 அம்சங்கள் (OnePlus Nord CE6 Specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate), 3,840Hz பிடபுள்யூஎம் டிம்மிங் (3,840Hz PWM dimming), 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 எஸ்ஒசி (Snapdragon 7s Gen 4 SoC) சிப்செட் உடன் புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.
ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி ஆதரவுடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் உள்ளது.
50எம்பி ரியர் கேமரா உடன் அறிமுகம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போன் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(In-display Fingerprint Sensor), IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

8000mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE6 Lite Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7400 Apex (Dimensity 7400 Apex) சிப்செட், ஆண்ட்ராய்டு 16 (Android 16) ஓஎஸ், 6.7-இன்ச் எல்சிடி டிஸ்பிளே, 50எம்பி ரியர் கேமரா, ஐபி68 ரேட்டிங், 7000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications