மிரண்டு போன மார்க்கெட்.. 8000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது புதிய ஒன்பிளஸ் 5ஜி போன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போனை வரும் மே 7-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த ஒன்பிளஸ் போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 அம்சங்கள் (OnePlus Nord CE6 Specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 எஸ்ஒசி (Snapdragon 7s Gen 4 SoC) சிப்செட் உடன் புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி ஆதரவுடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் உள்ளது.
6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate), 3,840Hz பிடபுள்யூஎம் டிம்மிங் (3,840Hz PWM dimming), 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போன் 50எம்பி ரியர் கேமரா உடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(In-display Fingerprint Sensor), IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
8000mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








