மே.8 க்கு அப்புறம் இதுதான்.. 8000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக இருக்கும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 (OnePlus Nord CE6), ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் (OnePlus Nord CE6 Lite) ஆகிய ஸ்மார்ட்போன்களில் விற்பனை தேதிகளானது, வெளியீட்டுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டு உள்ளன. இந்த நோர்ட் சிஇ6 மாடல்களின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
வருகிற மே 7ஆம் தேதி இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் ஸ்மார்ட்போன்கள் வெளியாக இருக்கின்றன. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதும் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டன. அதேபோல கேமரா, சிப்செட், பேட்டரி உள்ளிட்ட பீச்சர்களும் அதிகாரப்பூர்வாக வெளியாகின. ஆனால், விற்பனை தேதி உறுதி செய்யப்படாமல் இருந்தது.

ஏனென்றால், ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் நாளிலேயே விற்பனை தேதிகள் தெரியவரும். ஆனால், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் ஸ்மார்ட்போன்களின் விற்பனை தேதிகளானது வெளியீட்டுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டு உள்ளது. மே 7ஆம் தேதி வெளியான பிறகு அடுத்த நாளான மே 8ஆம் தேதியில் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்குகிறது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் ஸ்மார்ட்போனின் விற்பனை மே 12ஆம் தேதி தொடங்குகிறது. அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இந்தியா தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆகவே, விலை மற்றும் அறிமுக சலுகைகளை வெளியீட்டு தேதியன்று தெரிந்து கொள்ளலாம். இப்போது, இந்த நோர்ட் சிஇ6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 அம்சங்கள் (OnePlus Nord CE6 Specifications): 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3200Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 (Snapdragon 7s Gen 4) சிப்செட் கிடைக்க இருக்கிறது. மேலும், டச் ரெஃப்ளெக்ஸ் சிப் (Touch Reflex Chip) கிடைக்க இருக்கிறது.
80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 27W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்க இருக்கிறது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) கிடைக்கின்றன. MIL-STD-810H சர்டிபிகேஷன் மற்றும் IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.
50 எம்பி மெயின் கேமராவை இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொடுக்கப்பட்டு உள்ளது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. ஃப்ரஷ் ப்ளூ (Fresh Blue), லூனார் பேர்ல் (Lunar Pearl) மற்றும் பிட்ச் பிளாக் (Pitch Black) கலர்களில் வெளியாக இருக்கிறது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE6 Lite Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7400 ஏபெக்ஸ் (MediaTek Dimensity 7400 Apex) சிப்செட் கிடைக்கிறது. 6.72 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 90FPS கேமிங் கிடைக்கிறது. 7000mAh பேட்டரியை இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் கொடுக்கிறது.
இந்த பேட்டரிக்கு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 செல்பீ கேமராவை கொடுக்கிறது. MIL-STD-810H சர்டிபிகேஷனுடன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொண்ட மாடலாக இருக்கிறது. விவிட் மின்ட் (Vivid Mint) மற்றும் ஹைப்பர் பிளாக் (Hyper Black) கலர்களில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications