Home
Mobile

சத்தமின்றி OnePlus 5ஜி போனின் விலை உயர்வு.. 8000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 (OnePlus Nord CE6) ஸ்மார்ட்போனின் விலையை உயர்த்தியுள்ளது. குறிப்பாக சமீபத்தில் பல முன்னணி நிறுவனங்கள் போன்களின் விலையை உயர்த்திய நிலையில் ஒன்பிளஸ் நிறுவனமும் தற்போது போன்களின் விலையை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் இப்போது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 (OnePlus Nord CE6) போனின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

8ஜிபி ரேம் + 128ஜிபி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 மாடலின் முந்தைய விலை ரூ.29,999-ஆக இருந்தது. ஆனால் தற்போது இந்த மாடலின் விலை உயர்த்தப்பட்டு ரூ.31,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சத்தமின்றி OnePlus 5ஜி போனின் விலை உயர்வு.. எந்த மாடல்?

8ஜிபி ரேம் + 256ஜிபி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 மாடலின் முந்தைய விலை ரூ.32,999-ஆக இருந்தது. ஆனால் தற்போது இந்த மாடலின் விலை உயர்த்தப்பட்டு ரூ.34,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 அம்சங்கள் (OnePlus Nord CE6 Specifications): 6.78-இன்ச் 1.5K 10-பிட் AMOLED டிஸ்பிளே உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதுவும் இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

4என்எம் அடிப்படையிலான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட் உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

IP66/IP68/IP69/IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போனுக்கு MIL-STD-810H சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. திரைப்படம் பார்க்கும் மற்றும் கேமிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை சேர்த்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்

50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா வசதியும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சத்தமின்றி OnePlus 5ஜி போனின் விலை உயர்வு.. எந்த மாடல்?

8000mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான OxygenOS 16 ஓஎஸ் மூலம் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் ஃப்ரெஷ் ப்ளூ, லூனார் பேர்ல் மற்றும் பிட்ச் பிளாக் நிறங்களில் இந்த ஒன்பிளஸ் போனை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE6 price hiked in India: Check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X