மீண்டும் மீண்டுமா.. 2-வது முறையாக OnePlus 5ஜி போனின் விலை உயர்வு.. 8000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த மே மாதம் தான் இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 (OnePlus Nord CE6) போனின் விலையை உயர்த்தியது. இந்நிலையில் மீண்டும் இந்த ஒன்பிளஸ் போனின் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 போனின் புதிய விலையைப் பார்க்கலாம்.
8ஜிபி ரேம் + 128ஜிபி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 மாடலின் முந்தைய விலை ரூ.31,999-ஆக இருந்தது. ஆனால் தற்போது இந்த மாடலின் விலை உயர்த்தப்பட்டு ரூ.33,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

8ஜிபி ரேம் + 256ஜிபி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 மாடலின் முந்தைய விலை ரூ.34,999-ஆக இருந்தது. ஆனால் தற்போது இந்த மாடலின் விலை உயர்த்தப்பட்டு ரூ.36,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதிகரித்து வரும் சிப் மற்றும் மெமரி உயர்வால் இந்த போனின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 அம்சங்கள் (OnePlus Nord CE6 Specifications): ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 போன் 6.78-இன்ச் 1.5K 10-பிட் AMOLED டிஸ்பிளே உடன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதுவும் இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
அதேபோல் 4என்எம் அடிப்படையிலான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட் உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
குறிப்பாக IP66/IP68/IP69/IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த போனுக்கு MIL-STD-810H சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. திரைப்படம் பார்க்கும் மற்றும் கேமிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை சேர்த்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்
அதுவும் 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா வசதியும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதேபோல் 8000mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
மேலும் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான OxygenOS 16 ஓஎஸ் மூலம் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் ஃப்ரெஷ் ப்ளூ, லூனார் பேர்ல் மற்றும் பிட்ச் பிளாக் நிறங்களில் இந்த ஒன்பிளஸ் போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications