Home
Mobile

நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா.. 8000mAh பேட்டரி லேட்டஸ்ட் OnePlus 5ஜி போன் விலை திடீர் உயர்வு.. எந்த மாடல்?

பட்ஜெட், மிட்-ரேன்ஜ். அப்பர் மிட்-ரேன்ஜ். பிரீமியம், பிளாக்ஷிப் என கிட்டத்தட்ட ஒவ்வொரு ஸ்மார்ட்போன் பிராண்டும், அனைத்து விலை பிரிவுகளிலும் உள்ள தத்தம் ஸ்மார்ட்போன்களின் விலைகளை கடுமையாக உயர்த்தி வருகின்றன. சரி பழைய மாடல்கள் தான் விலை உயர்வை சந்திக்கின்றன என்று பார்த்தால், புதிய போன்களும் கூட எதிர்பார்த்ததை விட மிக அதிக விலையில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இதற்கிடையில் அறிமுகம் செய்யப்பட்டு முழுதாக 1 மாதம் கூட ஆகாத, 8000mAh பேட்டரி கொண்ட லேட்டஸ்ட் ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றின் விலை திடீரென உயர்த்தப்பட்டு உள்ளது. அது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 5ஜி (OnePlus Nord CE6 5G) ஸ்மார்ட்போன் ஆகும்.

8000mAh பேட்டரி லேட்டஸ்ட் OnePlus 5ஜி போன் விலை திடீர் உயர்வு!

நினைவூட்டும் வண்ணம், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, கடந்த மே 7 ஆம் தேதி அன்று, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் 5ஜி ஸ்மாட்போனுடன் சேர்த்து இந்தியாவில் அறிமுகமானது. அறிமுகமான போது, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.29,999 ஆகவும் மற்றும் ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.32,999 ஆகவும் இருந்தது.

ஆனால் தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.31,999 க்கும், ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.34,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே ரூ.2000 விலை உயர்த்தப்பட்டுள்ளன.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 லைட் ஸ்மார்ட்போனின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது: நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 லைட்ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.20,999 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.22,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,999 க்கும் அறிமுகமானது,

ஆனால் தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில், பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.25,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.28,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 6.78-இன்ச் 1.5K 10-பிட் அமோஎல்இடி டிஸ்பிளே
- 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 3,600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
- 4என்எம் அடிப்படையிலான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட்

- யுஎப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபிஅல்லது 12ஜிபி LPDDR4X ரேம்
- 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 2MP இரண்டாம் நிலை லென்ஸ்
- 32MP செல்பீ கேமரா
- ரியர் கேமராக்கள் மூலம் 4K 30 FPS வீடியோ பதிவு செய்யும் வசதி
- 8,000mAh பேட்டரி

- 80W SuperVOOC சார்ஜிங்
- மற்ற டிவைஸ்களை 27W வரைஇலாப ஸ்பீடில் ரிவர்ஸ்-சார்ஜ் செய்ய முடியும்
- ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஆக்சிஜென் ஓஎஸ் 16 ஓஎஸ்
- 5,000 mm² வேப்பர் சேம்பர்
- IP66, IP68, IP69, மற்றும் IP69K ரேட்டிங்
- MIL-STD-810H சான்றிதழ்

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE6 Nord CE6 Lite 5G Phones Selling At New Increased Price Within a Month of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X