Home
Mobile

செஞ்சி விட்ட OnePlus.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. புது Nord போன்.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் ஒன்பிளஸ் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களையும் தட்டித்தூக்கும்படி ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் (OnePlus Nord CE6 Lite) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இப்போது, சிப்செட் உள்ளிட்ட முக்கிய பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

வருகிற மே 7ஆம் தேதி ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 (OnePlus Nord CE6) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இந்தியா தளங்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இதில் பட்ஜெட்டில் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் இருக்கிறது.

செஞ்சி விட்ட OnePlus.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்!

ஏனென்றால், ரூ.20,000 முதல் ரூ.25,000 பட்ஜெட் செக்மெண்ட்டில் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் வெளியாக இருக்கிறது. இதை ஒன்பிளஸ் இந்தியா (OnePlus India) நிறுவனமே உறுதி செய்துள்ளது. இதனாலேயே எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த நேரத்தில் அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இந்தியா தளங்களில் முக்கிய பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE6 Lite Specifications): மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களுக்கு நிகரான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 ஏபெக்ஸ் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Apex 4nm) சிப்செட்டை இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) கொண்ட மாடலாக இருக்கிறது. நோர்ட் சீரிஸ் மாடல்களில் வழக்கமாக கிடைக்கும்படி 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கப்பட்டு உள்ளது.

4K வீடியோ ரெக்கார்டிங் மட்டுமல்லாமல், ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ ரீஃபிரேம் (AI Reframe), ஏஐ பர்பெக்ட் ஷாட் (AI Perfect Shot), ஏஐ ரெஃப்ளெக்சன் எரைசர் (AI Reflection Eraser), ஏஐ டீடெயில் பூஸ்ட் (AI Detail Boost) உள்ளிட்ட பீச்சர்களை கொடுக்கிறது. போர்ட்ராய்டு பிரியர்களுக்காக ஏஐ போர்ட்ராய்டு க்ளோவ் (AI Portrait Glow) பீச்சரும் கிடைக்கிறது.

விவிட் மின்ட் (Vivid Mint) மற்றும் ஹைப்பர் பிளாக் (Hyper Black) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. 6 வருட பேட்டரி ஹெல்த் வாரண்டி கிடைக்கிறது. இதற்கு பிறகும் பேட்டரி ஹெல்த் 80 சதவீதம் எதிர்பார்க்க முடியும்.

இந்த பேட்டரிக்கு ஃபைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 5,300 மிமீ வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் (Vapor Chamber Cooling system) கிடைக்கிறது. 6.72 இன்ச் ஃபுல்எச்டி (FHD) டிஸ்பிளேவை இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 144FPS கேமிங் கிடைக்கிறது.

MIL-STD-810H மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன் கொண்ட மாடலாக இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் ஸ்மார்ட்போன் இருக்கிறது. மே 7ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இப்போது, முக்கிய பீச்சர்கள் மற்றும் பட்ஜெட் விவரங்கள் வெளியாகி எதிர்பார்ப்பை இரட்டிப்பாக மாற்றி இருக்கிறது. ஓரிரு நாட்களில் மேலும் பீச்சர்கள் தெரியவரலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE6 Lite With Dimensity 7400 Apex Chip Confirmed Ahead of India Launch on May 7
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X