Home
Mobile

OnePlus செம்ம டிமாண்ட்.. ரூ.2,000 ஆஃபரில் 7000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் (OnePlus Nord CE6 Lite) ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கிவிட்டது. பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,000 தள்ளுபடி விலைக்கு கிடைப்பது மட்டுமல்லாமல், 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையில் கிடைப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது.

6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.20,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆகவும் இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.18,999 ஆரம்ப விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

OnePlus செம்ம டிமாண்ட்.. ரூ.2,000 ஆஃபரில் 7000mAh பேட்டரி.. மாடல்?

6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. எச்டிஎப்சி பேங்கின் கிரெடிட் கார்டுக்கு இந்த சலுகைகள் கிடைக்கின்றன. விவிட் மின்ட் (Vivid Mint) மற்றும் ஹைப்பர் பிளாக் (Hyper Black) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. மேட் பேக் பேனல் டிசைனில் வாங்கி கொள்ள கிடைக்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE6 Lite Specifications): 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 1000 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 ஏபெக்ஸ் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Apex 4nm) சிப்செட் கிடைக்கிறது. மாலி ஜி615 எம்பி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + ஓம்னிவிஷன் ஓவி50டி40 (Omnivision OV50D40) உள்ளது.

எப்/1.8 அபெர்சர் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது. 2 எம்பி மோனோகுரோம் கேமரா + எப்/2.4 அபெர்சர் கொடுத்துள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஏஐ பெர்பெக்ட் ஷாட், ஏஐ அன்பிளர், ஏஐ போர்ட்ராய்டு க்ளோவ் (AI Portrait Glow), ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ ரெப்ளெக்சன் எரைசர் (AI Reflection Eraser), ஏஐ ரீஃபிரேம் (AI Reframe) கிடைக்கிறது.

மேலும், ஏஐ டீடெயில் பூஸ்ட் (AI Detail Boost) உள்ளிட்ட ஏஐ பீச்சர்களை கொடுத்துள்ளது. 10x டிஜிட்டல் ஜூமிங், டூயல் வியூ வீடியோ உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. எப்/2.0 அபெர்சருடன் 8 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. 1080p 30fps வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது.

10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கிறது. 8.5 எம்எம் தடிமன் மற்றும் 208 கிராம் எடை உள்ளது. IP64 ரேட்டிங்குடன் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. மிலிட்டரி கிரேடு டிராப் ரெசிஸ்டன்ஸ் கொண்ட MIL-STD-810H சர்டிபிகேஷன் உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE6 Lite With 8GB RAM Available At Rs 2000 Discount on Amazon Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X