ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. 7000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் ஒன்பிளஸ் 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் ப்ரீடம் சேல் 2026 (Amazon Great Freedom Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் ஸ்மார்ட்போனும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது அமேசானில் நடைபெறும் கிரேட் ப்ரீடம் சேல் 2026 எனும் சிறப்பு விற்பனையில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் போனுக்கு 22 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை கம்மி பட்ஜெட்டில் வாங்க முடியும்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE6 Lite Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 7400 அப்பெக்ஸ் எஸ்ஓசி சிப்செட் உடன் இந்த ஒன்பிளஸ் போன் வெளிவந்தது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஏஆர்எம் மாலி-ஜி615 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இதில் உள்ளது.
6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,080 x 2,400 பிக்சல்கள், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1,000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 240Hz வரையிலான டச் சாம்பிளிங் ரேட், 392 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 91.4 சதவீத ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
தூசி மற்றும் நீர் தெறிப்புகளை தாங்கும் IP64 ரேட்டிங் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் ஸ்மார்ட்போன். மேலும் இந்த போன் MIL-STD-810H சான்றிதழ் பெற்றுள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
50எம்பி பிமைரி கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது.

7000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.
5ஜி, 4ஜி LTE, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.4, ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட், GPS, GLONASS, BDS, Galileo, QZSS, ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் என்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications