நாடே இந்த OnePlus 5ஜி போனுக்கு வெயிட்டிங்.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் 5ஜி (OnePlus Nord CE6 Lite 5G) ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் 5ஜி அம்சங்கள் (OnePlus Nord CE6 Lite 5G specifications): 6.7-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி சிப்செட் (MediaTek Dimensity 6300 5G chipset) உடன் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் இருக்கும்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் 5ஜி போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(Side-mounted fingerprint sensor) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் இந்த போனில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

7000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.23,000 பட்ஜெட்டில் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
photos credits: smartprix, OnePlus


Click it and Unblock the Notifications








