மிரளுது அமேசான்.. ரூ.1,500 ஆஃபரில் 7000mAh பேட்டரி OnePlus போன்.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா!
நோர்ட் சீரிஸ் மாடல்களில் பெரிய பேட்டரியுடன் வெளியான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் (OnePlus Nord CE6 Lite) ஸ்மார்ட்போன் தள்ளுபடியில் கிடைப்பதால் மிகப்பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. 7000mAh பேட்டரியை கொடுத்தது மட்டுமல்லாமல், 10W ரிவர்ஸ் சார்ஜிங், ஓம்னிவிஷன் கேமராவை பேக் செய்துள்ளது.
24 சதவீத தள்ளுபடி விலைக்கு 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் வேரியண்ட் கிடைக்கிறது. ரூ.25,998 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தகுதியான கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,500 தள்ளுபடியும் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.24,498 விலையில் வாங்கி கொள்ள முடியும்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE6 Lite Specifications): பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 ஏபெக்ஸ் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Apex 4nm) சிப்செட்டை இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் கொடுக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) உள்ளது.
ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) மற்றும் மாலி ஜி615 எம்பி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டு உள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் இந்த டிஸ்பிளேவுக்கு கிடைக்கிறது. கேமரா பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் இருக்கிறது. ஏனென்றால், 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மோனோகுரோம் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது.
மெயின் கேமராவுக்கு ஓம்னிவிஷன் ஓவி50டி40 (Omnivision OV50D40) சென்சார் மட்டுமல்லாமல், எப்/1.8 அபெர்சர் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி (Electronic Image Stabilization Technology) வருகிறது. மேலும், 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கிறது. 10x டிஜிட்டல் ஜூமிங் செய்து கொள்ளலாம்.
1080p வீடியோ ரெக்கார்டிங்குடன் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஏஐ அன்பிளர் (AI Unblur), ஏஐ எரைசர் (AI Eraser) மற்றும் ஏஐ ரீஃபிரேம் (AI Reframe) பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், ஏஐ பர்பெக்ட் ஷாட் (AI Perfect Shot), ஏஐ போர்ட்ராய்டு க்ளோவ் (AI Portrait Glow), ஏஐ ரெப்ளெக்சன் எரைசர் (AI Reflection Eraser) உள்ளது.
ஏஐ டீடெயில் பூஸ்ட் (AI Detail Boost) பீச்சர்கள் வருகின்றன. 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரியை இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இந்த பேட்டரியுடன் 8.5 எம்எம் தடிமன் மற்றும் 208 கிராம் எடை கொண்டுள்ளது.
IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் மற்றும் MIL-STD-810H சர்டிபிகேஷனுடன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio) கொடுக்கப்பட்டு இருக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) உள்ளது.


Click it and Unblock the Notifications