Home
Mobile

ஆர்டர் அள்ள போகுது.. 7100எம்ஏஎச் பேட்டரி.. சோனி கேமரா.. ஆஃபரில் OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் தற்போது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 (OnePlus Nord CE5) ஸ்மார்ட்போன் ஆனது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 7100எம்ஏஎச் பேட்டரி, டைமன்சிட்டி சிப்செட், சோனி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

இப்போது அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 மாடலுக்கு 14 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.24,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க முடியும்.

ஆர்டர் அள்ள போகுது.. ஆஃபரில் OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 அம்சங்கள் (OnePlus Nord CE5 Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 8350 அபெக்ஸ் (MediaTek Dimensity 8350 Apex) சிப்செட் வசதியுடன் இந்த ஒன்பிளஸ் போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

அதேபோல் 6.77-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் ஆக்சிஜன் ஓஎஸ் 15 (OxygenOS 15) ஸ்கின் கொண்டு இயங்குகிறது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (சோனி LYT-600 சென்சார்) + 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஆர்டர் அள்ள போகுது.. ஆஃபரில் OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?

அதுவும் 7100mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவும் உள்ளது. அதேபோல் IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

மேலும் 5ஜி, 4ஜி LTE, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, NFC, GPS, NavIC, USB Type-C போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் எடை 199 கிராம் ஆகும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE5 with 8GB RAM available at 14 percent discount on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X