ஜூலை.8 குறிச்சாச்சு.. அப்புறம் இதுதான் டாப்.. 12GB ரேம்.. 7100mAh பேட்டரி.. 120FPS கேமிங்.. எந்த மாடல்?
மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 (OnePlus Nord CE5) மாடலானது, வரும் ஜூலை 8ஆம் தேதி இந்திய மார்கெட்டில் களமிறங்க இருக்கிறது. இதற்கு முன்பே விற்பனை தேதியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோர்ட் போனில் இதுவரை கிடைக்காத பேட்டரி கேபாசிட்டி கிடைப்பதால், ஒன்பிளஸ் பிரியர்கள் அறக்க பறக்க காத்திருக்கின்றனர். இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 போனில் என்னென்ன பீச்சர்களை எதிர்பார்க்கலாம்? விலை எப்படி இருக்கும்? எங்கு ஆர்டருக்கு கிடைக்கும்? உள்ளிட்ட முழு விவரங்கள் இதோ.
ஒன்பிளஸ் நோர்ட் 5, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் 4 ஆகிய மூன்று ப்ரொடெக்ட்களும் வரும் ஜூலை 8ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 மாடலானது 7100mAh பேட்டரியுடன் இதுவரையில் வெளியான ஒன்பிளஸ் நோர்ட் மாடல்களிலேயே அதிக கேபாசிட்டி கொடுக்க இருக்கிறது.

அமேசான் பிரைம் டே சேல் (Amazon Prime Day Sale) ஆனது ஜூலை 12ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தேதியில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 போனின் விற்பனை தொடங்க இருக்கிறது. ஆகவே, வெளியீட்டுக்கு முன்பே விற்பனை தேதி உறுதியாகி இருப்பதால், ஒன்பிளஸ் பிரியர்கள் டபுள் குஷியில் இருக்கின்றன. ஏனென்றால், டிஸ்கவுண்ட் எதிர்பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 அம்சங்கள் (OnePlus Nord CE5 Specifications): இந்த நோர்ட் போனில் சிப்செட், பேட்டரி மற்றும் கேமிங் பீச்சர்கள் அமேசான் தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதை முதலில் தெரிந்து கொள்ளலாம். முன்பே சொன்னதை போல சிங்கிள் சார்ஜில் 2.5 நாட்கள் பேக்கப் கொடுக்கும்படியான 7100mAh பேட்டரி இதில் கிடைக்க இருக்கிறது.
மீடியாடெக் டைமன்சிட்டி 8350 எஸ்ஓசி (MediaTek Dimensity 8350 SoC) கிடைக்க இருக்கிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் மிட்-ரேஞ்ச் மாடல்களுக்கு நிகராக இருக்கும். இதுபோக பிஜிஎம்ஐ (BGMI), சிஓடிஎம் (CODM) போன்ற ப்ரோ லெவல் கேமிங் பிரியர்களுக்காக ப்ரோ கேமர் மோட் (Pro Gamer Mode) மற்றும் அடாப்டிவ் ஃபிரேம் பூஸ்டர் (Adaptive Frame Booster) கிடைக்கிறது.
120FPS கேமிங் ஃபிரேம் ரேட் பெற்று கொள்ளலாம். இதற்கு ஏற்ப 12 ரேம் வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. நெக்சஸ் ப்ளூ (Nexus Blue) கலரில் கிடைக்க இருக்கிறது. ஆக்ஸிஜன் ஓஎஸ் 15 (OxygenOS 15) வர இருக்கிறது. அதேபோல ஒன்பிளஸ் ஏஐ (OnePlus AI) பீச்சர்களும் வர இருக்கிறது. இந்த பீச்சர்களை மட்டுமே ஒன்பிளஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இதன் விலை விவரங்கள் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், ரூ.26,999 பட்ஜெட்டில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 போனானது, ரூ.24,999 பட்ஜெட்டில் வெளியானது. இருப்பினும், ஆரம்ப விலை இன்னும் குறைவாக இருக்கலாம். இந்த நோர்ட் சிஇ5 போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் 80W சார்ஜிங் எதிர்பார்க்கலாம்.
முன்னதாக ஒன்பிளஸ் நோர்ட் 5 போனின் பீச்சர்களும் வெளியாகின. அதை இப்போது தெரிந்து கொள்ளலாம். நோர்ட் 5 போனில் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3) சிப்செட் கிடைக்க இருக்கிறது. 144FPS கேமிங் ஃபிரேம் ரேட் மற்றும் 12 ஜிபி ரேம் வர இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமராவானது சோனி எல்ஒய்டி 700 (SONY LYT 700) சென்சாருடம் வருகிறது.
மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. இந்த பீச்சர்கள் மட்டுமே அதிகரப்பூர்வமாக வெளியாகி இருக்கின்றன. இந்த போனும் ஜூலை 8ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆனால், அடுத்த நாளே ஓப்பன் சேல் தொடங்க இருக்கிறது. நோர்ட் சிஇ5 மாடலின் விற்பனை ஜூலை 12ஆம் தேதிதான் தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications








