இந்த OnePlus போனுக்கு இந்தியாவே வெயிட்டிங்! 7100mAh பேட்டரி.. சோனி கேமரா.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 (OnePlus Nord CE5) ஸ்மார்ட்போனை வரும் ஜூலை 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 ஸ்மார்டபோனின் முக்கிய விவரக்குறிப்புகளை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 அம்சங்கள் (OnePlus Nord CE5 specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 8350 அபெக்ஸ் (MediaTek Dimensity 8350 Apex) வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

அதேபோல் கேமிங் பயனர்களை கவரும் வகையில் 6-கோர் மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் மேம்பட்ட AI அம்சங்கள் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 ஸ்மார்ட்போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவு கொண்ட 50எம்பி சோனி LYT-600 1/1.95 ப்ரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரா எச்டிஆர் (RAW HDR), 4K 60fps வரை HDR வீடியோ ரெகார்ட், அல்ட்ரா எச்டிஆர் (Ultra HDR) கேப்ச்சர் போன்ற பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த ஒன்பிளஸ் போனில் உள்ளன. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ஒன்பிளஸ் போனில் உள்ளன. எனவே இந்த புதிய ஒன்பிளஸ் போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
6.77-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தைத் தரும்.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த ஒன்பிளஸ் போனில் உள்ளன.
7,100mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த போனின் பேட்டரி 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மூலம் 59 நிமிடங்களில் 1% முதல் 100% வரை சார்ஜ் ஆகும் என்பதையும் ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.25,000 பட்ஜெட்டில் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் இந்தியாவுக்கு வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








