இதுக்கு தானே கிடந்தோம்.. வெறும் ரூ.23,000 பட்ஜெட்ல OnePlus போன்.. 7100mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 5ஜி (OnePlus Nord CE5 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.25,000 பட்ஜெட்டைவிட கம்மியான விலைக்கு 7100mAh பேட்டரி மற்றும் 80W சார்ஜிங் மட்டுமல்லாமல், ஓஐஎஸ் கேமரா, அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களையும் கொடுக்கிறது. ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 ஏபெக்ஸ் சிப்செட் கொண்ட இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 5ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்கள், விலை விவரங்களை பார்க்கலாம்.
மார்கெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் ரூ.26,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் ரூ.28,999 ஆகவும் இருக்கிறது. ஆனால், பிளிப்கார்ட் தளத்தில் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.24,214ஆக இருக்கிறது.

இந்த விலையில் ரூ.1,211 உடனடி தள்ளுபடி போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை ரூ.23,003 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ.1,318 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இப்படி தள்ளுபடி விலைக்கு பிளிப்கார்ட் தளத்தில் வாங்க கிடைக்கிறது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 5ஜி அம்சங்கள் (OnePlus Nord CE5 5G Specifications): இந்த நோர்ட் சிஇ5 5ஜி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஆக்ஸிஜன் ஓஎஸ் 15 (Oxygen OS 15) கிடைக்கிறது. மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 ஏபெக்ஸ் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8350 Apex 4nm) சிப்செட் கிடைக்கிறது.
6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1430 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 300Hz டச் சாம்பிளிங் ரேட், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக 1300 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட எச்பிஎம் மோட் உள்ளது.
ஆகவே, டிஸ்பிளேவிலும் மிட்-பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம். இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மற்றும் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் கொடுக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.
அல்ட்ரா வைடு கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி08டி10 (OmniVision OV08D10) சென்சார் கிடைக்கிறது. இதுபோக ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி, 10X டிஜிட்டல் ஜூமிங், பேஸ் டிடெக்சன் ஆட்டோபோகஸ் (Phase Detection Autofocus) போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 5ஜி ஸ்மார்ட்போனில் 7100mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.
பிளாக் இன்பினிட்டி (Black Infinity), மார்பிள் மிஸ்ட் (Marble Mist) அல்லது நெக்சஸ் ப்ளூ (Nexus Blue) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் பாட்டர் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom-ported Speakers) கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications