லட்டு மாதிரி டிஸ்கவுண்ட்.. ரூ.3,001 ரேட் கம்மி.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?
சோனி எல்ஒய்டி சென்சார் கேமரா, ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே, 80W சூப்பர்வூக் சார்ஜிங், 5500mAh பேட்டரி போன்ற மிரளவிடும் பீச்சர்களுடன் பிரீமியம் லுக்கில் வெளியான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் (OnePlus Nord CE4 Lite) போனுக்கு ரூ.3,001 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த போனின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE4 Lite Specifications): இந்த நோர்ட் போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட 6என்எம் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 (6nm Octa Core Qualcomm Snapdragon 695) சிப்செட் கிடைக்கிறது. இதற்கு ஏற்ப அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) வருகிறது.

கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப பிளாட் டிசைனில் 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. இதுபோக 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் P3 கலர் காமட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் போனில் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி, எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization), 10X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் பிடிஏஎப் (PDAF) ஆட்டோ போகஸ் சப்போர்ட் கிடைக்கிறது.
இதுபோக டூயல் ரியர் எல்இடி லைட்கள் (Dual Rear LED Lights) மற்றும் சிங்கிள் கலர் டெம்பரேச்சர் (Single Color Temperature) சப்போர்ட் கிடைக்கிறது. பிடிஏஎப் மட்டுமல்லாமல், சிஏஎப் (CAF) ஆட்டோ போகஸ் சப்போர்ட் வருகிறது. இந்த மெயின் கேமராவுடன் 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடையாது. 1080p வீடியோ ரெக்கார்டிங் மட்டுமே கிடைக்கிறது.
இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் போனில் ஃபிக்சட் போகஸ் சப்போர்ட் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 16 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது. இதுபோக 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் இருக்கிறது. கூடுதல் மெமரிக்காக 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த போனில் IP54 ரெசிஸ்டன்ட் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் (In-display Fingerprint), டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் பேக் செய்கிறது. இந்த பட்ஜெட்டில் வரவேற்கும்படி 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் 5500mAh பேட்டரி கிடைக்கிறது.
இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமர கொண்ட வேரியண்ட் ரூ.19,999 பட்ஜெட்டில் இந்திய மார்கெட்டுக்கு வந்தது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.17,998 பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விலை குறைப்பிலும் ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.16,998 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications







