Home
Mobile

அடிச்சு தூக்குது ஆர்டர்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) எந்தவொரு டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டும் இல்லாமலேயே பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட்டில் சோனி சென்சார் கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 5500mAh பேட்டரி மற்றும் அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் (OnePlus Nord CE4 Lite) கிடைக்கிறது. இந்த நோர்ட் போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் நோர்ட் போன்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர்களிடையே ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைனும் பட்ஜெட்டில் கிடைத்ததால் விற்பனை பட்டையை கிளப்பியது. இப்போது, நேரடி விலை குறைப்பில் பிளிப்கார்ட்டில் பின்னியெடுக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆக இருக்கிறது.

அடிச்சு தூக்குது ஆர்டர்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 5500mAh பேட்டரி போன்!

ஆனால், பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்தால், வெறும் ரூ.17,990 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். முன்பே சொன்னதுபோல, இந்த விலையில் வாங்கி கொள்ள எந்தவொரு டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டும் தேவையில்லை. இந்த பட்ஜெட்டில் கிடைக்கும் பீச்சர்களை பார்த்தால், பரவால்லையேப்பா என்று உங்களுக்கே தோன்றும். அதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE4 Lite Specifications): இந்த நோர்ட் போனில் 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் பேக் செய்யப்பட்டுள்ளது. மேலும், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.

ஆகவே, டிஸ்பிளேவில் பட்ஜெட்டைவிட கூடுதலாகவே பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். இந்த போனில் ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) கொண்ட ஆக்டா கோர் 6என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 (Octa Core 6nm Qualcomm Snapdragon 695) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது. அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உள்ளது.

இந்த பட்ஜெட்டிலும் 5500mAh பேட்டரி மட்டுமல்லாமல், 80W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. ஆகவே, அதிக பேக்கப் கொடுக்கும் மாடல்களில் இதுவும் இடம் பெற்றுள்ளது. இப்போது கேமரா பீச்சர்களுக்கு வருவோம், இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் கிடைக்கிறது.

மேலும், மெயின் கேமராவில் 10X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் 1080p வீடியோ ஷூட் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) சப்போர்ட் கூடுதலாக கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சிலாட் மற்றும் டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) உள்ளது.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் போனை சூப்பர் சில்வர் (Super Silver), அல்ட்ரா ஆரஞ்ச் (Ultra Orange) மற்றும் மெகா ப்ளூ (Mega Blue) ஆகிய 3 கலர்களின் வாங்கி கொள்ளலாம். இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் (In-display Finger Print) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. இந்த பட்ஜெட்டுக்கு பக்காவான பீச்சர்களையே கொடுக்கிறது.

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE4 Lite With 50MP Camera Sale Under Rs 18000 in Flipkart Discount Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X