Home
Mobile

மொரட்டு விற்பனை.. ரூ.17000 பட்ஜெட்ல SONY கேமரா.. 80W சார்ஜிங்.. 5500mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த போன்?

அமேசான் அதிரும்படியான டிஸ்கவுண்ட்டில் சோனி எல்ஒய்டி சென்சார் கேமரா மட்டுமல்லாமல், 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 5500mAh பேட்டரி, ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே, 1 டிபிக்கான எஸ்டி கார்டு சிலாட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற மிட்-பிரீமியம் பீச்சர்களை கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் (OnePlus Nord CE4 Lite) விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் இந்த நோர்ட் மாடலில் என்னென்ன வருகிறது? விலை மற்றும் டிஸ்கவுண்ட் எப்படி? உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் விலை (OnePlus Nord CE4 Lite Price): இந்த நோர்ட் போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆகவும், 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.22.999ஆகவும் இருக்கிறது.

மொரட்டு விற்பனை.. ரூ.17000 பட்ஜெட்ல SONY கேமரா.. 80W சார்ஜிங் மாடல்!

இப்போது, அமேசான் தளத்தில் 128 ஜிபி மாடலுக்கு ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. மேலும், ரூ.18,800 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. ஆகவே, இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் மாடலை ரூ.17,999 ஆரம்ப விலையில் வாங்கி கொள்ளலாம். இந்த போனின் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE4 Lite Specifications): இந்த ஒன்பிளஸ் போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் சோனி எல்ஒய்டி600 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. 2 எம்பி டெப்த் சென்சாருடன் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டிருக்கிறது.

மல்டி ஆட்டோபோகஸ் (Multi Autofocus), 10x ஜூமிங் (Zooming) மற்றும் 1080p வீடியோ ஷூட் சப்போர்ட் உள்ளது. 16 செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவை போலவே பேட்டரி சிஸ்டம் பட்டையை கிளப்புகிறது. 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) சப்போர்ட் கொண்ட 5500mAh பேட்டரி வருகிறது.

மொரட்டு விற்பனை.. ரூ.17000 பட்ஜெட்ல SONY கேமரா.. 80W சார்ஜிங் மாடல்!

இவ்வளவு பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டும், 8.1 மிமீ தடிமன் மற்றும் 191 கிராம் எடை வருகிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் மாடலில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 6என்எம் 5ஜி எஸ்ஓசி (Qualcomm Snapdragon 695 6nm 5G SoC) சிப்செட் வருகிறது.

6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட், டூயல் சிம் சிலாட் உள்ளது.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகிறது. மேலும், IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) கனெக்டிவிட்டி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE4 Lite With 50MP Camera Sale Under Rs 18000 in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X