ரூ.4,002 ரேட் கட்ல OnePlus.. 5500mAh பேட்டரி.. SONY கேமரா.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 (OnePlus Nord CE5) போனின் வெளியீடு நெருங்கிவிட்டதால், முந்தைய மாடலான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் (OnePlus Nord CE4 Lite) போனுக்கு விலை குறைப்பு கிடைக்கிறது. இதுபோக பேங்க் டிஸ்கவுண்ட் வருவதால், அதிகப்படியான டிஸ்கவுண்ட் விலைக்கு வாங்கி கொள்ள முடிகிறது. 5500mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி சென்சார் கேமரா, அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களில் பட்டையை கிளப்பும் இந்த போனின் விலை மற்றும் பீச்சர்களை இப்போது பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் புது விலை (OnePlus Nord CE4 Lite New Price): இந்த நோர்ட் போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் மார்கெட் விலை ரூ.22,999ஆக இருக்கிறது.

இந்த விலையிலேயே மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இப்போது ரூ.2,002 விலை குறைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. ஆகவே, அமேசான் விற்பனையில் (Amazon Sale) இப்போது ஆர்டர் செய்தால், ரூ.20,997 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த நேரடி விலை குறைப்பு போக ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் வருகிறது.
இதை பெறுவதற்கு ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஆர்டர் செய்ய வேண்டும். இதே ரூ.2,000 டிஸ்கவுண்ட் ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தாலும் கொடுக்கப்படும். ஆகவே, ரூ.2,002 விலை குறைப்பு + ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் என்று ரூ.4,002 விலை கம்மியாக 256 ஜிபி மெமரி மாடலை ஆர்டர் செய்ய முடியும்.
ரூ.18,997 பட்ஜெட்டில் கிடைக்கிறது. சொல்லப்போனால், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் மார்கெட் விலையே ரூ.19,999ஆக இருக்கிறது. ஆனால், இப்போது விலை குறைப்பு காரணமாக அதைவிட மலிவான விலைக்கு 256 ஜிபி மெமரி மாடல் கிடைக்கிறது. இதேபோல ரூ.4,002 டிஸ்கவுண்ட்டில் 128 ஜிபி மெமரி மாடலை வாங்கி கொள்ளலாம்.
அதாவது, அந்த மாடலின் மார்கெட் விலை ரூ.19,999ஆக இருக்கிறது என்றால், இப்போது முந்தைய மாடலை போலவே ரூ.4,002 டிஸ்கவுண்ட் போக ரூ.15,997 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் மாடலில் 3 கலர்கள் கிடைக்கின்றன. இந்தியாவில் மட்டுமே கிடைக்கும் அல்ட்ரா ஆரஞ்சு (Ultra Orange) வருகிறது.
இதுபோக சூப்பர் சில்வர் (Super Silver) மற்றும் மெகா ப்ளூ (Mega Blue) ஆகிய கலர்களும் வருகின்றன. இந்த நோர்ட் சிஇ4 லைட் போனில் முக்கிய பீச்சராக பேட்டரி சிஸ்டம் இருக்கிறது. 80W சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் 5500mAh பேட்டரி கிடைக்கிறது. அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) மற்றும் ஸ்னாப்டிராகன் 695 6என்எம் (Snapdragon 695 6nm) சிப்செட் உள்ளது.
இந்த நோர்ட் போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) மற்றும் 50 எம்பி மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி600 சென்சார் கிடைக்கிறது. 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. 6.67 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








