Home
Mobile

இந்த OnePlus போனுக்கு தான் பல பேர் வெயிட்டிங்.. 50எம்பி கேமரா.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5ஜி போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது பிஐஎஸ் சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளது. எனவே இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

இந்த ஒன்பிளஸ் போனுக்கு தான் பல பேர் வெயிட்டிங்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE4 Lite specifications): இந்த ஒன்பிளஸ் போனின் மாடல் நம்பர் CPH2619 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 6.67-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன் வெளிவரும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்இ இன்-டிஸ்பிளேை கைரேகை ரீடர் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

தரமான ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் ( Snapdragon 6 gen 1 SoC) வசதியுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் இந்த போனுக்கு அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போன்.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும். அதேபோல் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த அசத்தலான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போனின் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

இந்த ஒன்பிளஸ் போனுக்கு தான் பல பேர் வெயிட்டிங்.. எந்த மாடல்?

5500எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் மாடல். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போனில் உள்ளன. மேலும் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன் ஆனது இந்தியாவில் ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE4 Lite Spotted on BIS : India Launch Soon: check specifications price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X