Home
Mobile

இதுதான் ஆஃபர்.. ரூ.16000 பட்ஜெட்ல SONY கேமராவுடன் OnePlus நோர்ட்.. 5500mAh பேட்டரி.. 16GB ரேம்.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Amazon Great Freedom Festival Sale 2024) ஒன்பிளஸ் நோர்ட் சீரிஸ் பிரியர்கள் அறக்க பறக்கும்படியான டிஸ்கவுண்ட்டில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி (OnePlus Nord CE4 Lite 5G) போன் விற்பனைக்கு வருகிறது. சோனி எல்ஒய்டி சென்சாருடன் 50 எம்பி கேமரா, ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி போன்ற பீச்சர்களில் பின்னிப்பெடல் எடுக்கும் இந்த போனின் முழு விவரங்கள் இதோ.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE4 Lite Specifications): இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS), ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) மற்றும் மிட்-ரேஞ்ச் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இதுதான் ஆஃபர்.. ரூ.16000 பட்ஜெட்ல SONY கேமராவுடன் OnePlus நோர்ட் போன்!

ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 6என்எம் 5ஜி எஸ்ஓசி (Octa Core Qualcomm Snapdragon 695 6nm 5G SoC) சிப்செட் வருகிறது. இந்த நோர்ட் போனில் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் சிஸ்டம் வருகிறது.

இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS), 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. அதேபோல 10x டிஜிட்டல் ஜூமிங் கொண்டிருக்கிறது. இந்த நோர்ட் போனில் 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 8 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) மற்றும் 1 டிபி மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் உள்ளது.

இதுதான் ஆஃபர்.. ரூ.16000 பட்ஜெட்ல SONY கேமராவுடன் OnePlus நோர்ட் போன்!

டூயல் நானோ சிம் சிலாட் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் வருகிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் உள்ளது.

மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த நோர்ட் போனில் 5500mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் (SuperVOOC) சார்ஜிங் வருகிறது. IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. மிட்-ரேஞ்ச் போன்களில் வரும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் உள்ளது.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் வருகிறது. சூப்பர் சில்வர் (Super Silver) மற்றும் மெகா ப்ளூ (Mega Blue) ஆகிய 2 கலர்களின் ஆர்டருக்கு கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலின் ரூ.22,999ஆகவும் இருக்கிறது. இப்போது அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் வெறும் ரூ.16,999 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது.

ஆகவே, ரூ.3000 விலை குறைப்பில் வாங்கி கொள்ளலாம். இந்த ப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையானது, ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. பிரைம் கஸ்டமர்களுக்கு நள்ளிரவு 12 மணி முதல் தொடங்குகிறது. மற்ற கஸ்டமர்களுக்கு ஆகஸ்ட் 6 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது.

இதேபோல அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி போனும் ரூ.27,999 பட்ஜெட்டுக்கு வர இருக்கிறது. மேலும், ஐபோன் 13, சாம்சங் கேலக்ஸி எஸ்21, ஐக்யூ இசட்9 லைட், ரியல்மி நார்சோ என்61, ரெட்மி 13சி போன்ற பல்வேறு போன்கள் டிஸ்கவுண்ட்டில் கிடைக்க இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE4 Lite Sale Under Rs 17000 Amazon Great Freedom Festival Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X