இறங்கி அடிச்ச OnePlus.. வெறும் ரூ.18,999 போதும்.. சோனி கேமரா.. 80W சார்ஜிங்.. புது 5G போன் அறிமுகம்..
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் (OnePlus Nord CE4 Lite) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஸ்னாபடிராகன் 695 சிப்செட், ஒஎல்இடி டிஸ்பிளே, 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போனின் விலை, அம்சங்கள், விற்பனை விவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE4 Lite specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே (OLED display) வசதியுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2100 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் (Snapdragon 695 chipset)வசதியுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் போன் வெளிவரும். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் இந்த போனுக்கு அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன்.
ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி எல்ஒய்டி-600 (Sony LYT-600) பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5500எம்ஏஎச் பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (80W SuperVOOC fast charging) வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்து விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(In-display Fingerprint Sensor), 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (IP54 Dust and Splash resistant ) போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளன. மேலும் 5ஜி (5G), டூயல் 4ஜி வோல்ட் (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11 ஏசி (Wi-Fi 6 802.11 ac), புளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C) போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி போனின் விலை ரூ.19,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.சூப்பர் சில்வர் (Super Silver), மெகா புளூ ( Mega Blue), அல்ட்ரா ஆரஞ்சு (Ultra Orange) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். அமேசான், ஒன்பிளஸ் இணையதளத்தில் ஜூன் 27-ம் தேதி முதல் இந்த போனை வாங்க முடியும்.
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.18,999 இருந்தால் வாங்கிவிட முடியும்.


Click it and Unblock the Notifications