அள்ளி வீசும் அமேசான்.. சோனி கேமரா.. 80W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி (OnePlus Nord CE4 Lite 5G) தற்போது அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த ஒன்பிளஸ் போன் 80W சார்ஜிங், AMOLED டிஸ்பிளே, 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட் சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 19 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் இந்த போனை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை வாங்கினால் ரூ.15748 விலையில் வாங்கிவிட முடியும்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி அம்சங்கள் (OnePlus Nord CE4 Lite 5G Specifications): தரமான ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 6என்எம் 5ஜி எஸ்ஓசி (Octa Core Qualcomm Snapdragon 695 6nm 5G SoC) கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். மேலும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனில் உள்ளது.
அதுவும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்.
அதேபோல் 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே இந்த போனில் உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 × 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். அதாவது நீங்கள் 1 டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி போன் 50 எம்பி Sony LYT-600 மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ஓஐஎஸ் (OIS), 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட், 10x டிஜிட்டல் ஜூமிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளன இந்த ரியர் கேமராக்கள். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன்.
5500mAh பேட்டரி பேட்டரி வசதி உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. 80W சூப்பர்வூக் (SuperVOOC) சார்ஜிங் வசதியும் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி போனில் உள்ளன. சில்வர் (Super Silver) மற்றும் மெகா ப்ளூ (Mega Blue), அல்ட்ரா ஆரஞ்சு (Ultra Orange) நிறங்களில் இந்த ஒன்பிளஸ் போன் வாங்க கிடைக்கும்


Click it and Unblock the Notifications








