மார்கெட் மிரளுது.. பட்ஜெட்ல SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் பிரியர்கள் அறக்க பறக்கும்படியான பட்ஜெட்டில் 2100 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சாருடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா, 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், அல்ட்ரா பிரீமியம் லுக் கொண்ட டிசைனில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி (OnePlus Nord CE4 Lite 5G) போன் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. இப்போது, முக்கிய பீச்சர்கள் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
இந்த நோர்ட் சிஇ4 லைட் போனானது, வரும் ஜூன் 24ஆம் தேதி இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனால், அந்த போனின் அம்சங்கள் அவ்வப்போது வெளியாகி ஒன்பிளஸ் பிரியர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகிறது. இப்போது, பேட்டரி மற்றும் சார்ஜிங் பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி மேலும் ஆர்வத்தை தூண்டிவிட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE4 Lite Specifications): இந்த நோர்ட் மாடலில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2100 பீக் பிரைட்னஸ் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு கர்வ்ட் டிஸ்பிளே மாடல் கிடையாது. அதன் முந்தைய மாடல்களை போலவே பிளாட் டிஸ்பிளே டிசைன் கொண்டிருக்கிறது.
ஆனால், கேமராவில் பிரீமியம் சென்சார் வருகிறது. சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இதுவொரு டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்ட மாடலாகும். இருப்பினும், செகண்டரி கேமராவை பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.
இந்த கேமராவுக்கு டூயல் ரியர் எல்இடி பிளாஷ் (Dual Rear LED Flash) வருகிறது. ஆகவே, நைட்போட்டோகிராபிக்கான பீச்சர்களை எதிர்பார்க்கலாம். செல்பீ ஷூட்டர் விவரங்கள் வெளியாகவில்லை. இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் போனின் பேட்டரி சிஸ்டமானது, பேக்கப்பில் பட்டையை கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை.

ஏனென்றால், 5500mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SUPERVOOC Fast Charging) மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) சப்போர்ட் வருகிறது. யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) வருகிறது. இந்த பேட்டரி மூலம் 20 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும், நாள் முழுவதும் பேக்கப் பெறலாம்.
அதேபோல 52 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். மெகா ப்ளூ (Mega Blue) கலர் வேரியண்ட்டில் வெளியாக இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கூறிய பீச்சர்கள் மற்றும் டிசைன் விவரங்களே இதுவரையில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கின்றன.
இருப்பினும், இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் போனின் மற்ற பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. ஆகவே, இந்த ஒன்பிளஸ் மாடலில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி சிப்செட் வருகிறது, அல்லது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் வர வாய்ப்புள்ளது.
16 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த போனில் கிரீன் மட்டுமல்லாமல், சூப்பர் சில்வர் (Super Silver) என்னும் கிரே கலரும் வெளியாகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் வருகின்றன. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் வருகிறது.
இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் போனின் ஆரம்ப விலை ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், இதே பீச்சர்கள் மற்றும் டிசைனில் சீனாவில் வெளியாகிய ஓப்போ கே12எக்ஸ் போனின் ஆரம்ப விலை ரூ.15,000 பட்ஜெட்டில் இருந்தது. ஆனால், இதில் சோனி கேமரா வருவதால், ரூ.20000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications