ரூ.3001 தள்ளுபடியில் கிடைக்கும் OnePlus 5G போன்.. 50MP சோனி கேமரா, 80W சார்ஜிங், 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் ஆர்வலர்களும், ஒன்பிளஸ் ரசிகர்களும் ஏப்ரல் 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட உள்ள ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் மீது கவனத்தை குவித்துள்ளனர். நிச்சயம் இது ரூ.60,000 க்கு அருகாமையிலான பட்ஜெட்டில் தான் வரும்.
ஒருவேளை நீங்கள் ஒன்பிளஸ் பிராண்டில் இருந்து மிகவும் மலிவான.. அடுத்த நோர்ட் சீரீஸ் ஸ்மார்ட்போனிற்கான காத்திருந்தால், நீங்கள் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். மாறாக ஆபர் விலையில் கிடைக்கும் ஒன்பிளஸ் மாடலை தேடினால்.. நீங்கள் செல்ல வேண்டியது விஜய் சேல்ஸ் வலைத்தளத்திற்கு தான்!

ஏனென்றால் அங்குதான் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி (OnePlus Nord CE4 Lite 5G) ஸ்மார்ட்போன் மீது 14% தள்ளுபடி கிடைக்கிறது. தற்போது விஜய் சேல்ஸ்-ல் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி ஸ்மார்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் 14% தள்ளுபடியை பெற்று ரூ.20,999 க்கு பதிலாக ரூ.17,998 க்கு வாங்க கிடைக்கிறது. விஜய் சேல்ஸ் வழியாக இந்த ஆபர்-ஐ பெற இங்கே கிளிக் செய்யவும்!
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1,080 x 2,400 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2100 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உடனான 6.67-இன்ச் புல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளேவை கொண்டு உள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இது அட்ரெனோ 619 ஜிபியு, 8ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 256ஜிபி வரை UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் (Qualcomm Snapdragon 695 SoC) மூலம் இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.
இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடனான 1/1.95-இன்ச் 50 மெகாபிக்சல் சோனி LYT-600 ப்ரைமரி சென்சார் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளன. முன்பக்கத்தில் எலெக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடனான 16-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 80W வயர்டு சூப்பர்வூக் மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5500mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது 5ஜி, வைஃபை 5, ஜிபிஎஸ் ப்ளூடூத் 5.1 மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட், தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி4 ரேட்டிங், இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது.
சற்றே பழைய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை இப்போது நம்பி வாங்கலாமா? இப்போதும் கூட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை ஏன் நம்பி வாங்கலாம் என்பதற்கான 4 நல்ல காரணங்களை எங்களால் முன்வைக்க முடியும். முதல் காரணம் - இது பட்ஜெட் விலை மாடலாக இருந்தாலும் கூட ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிரீமியம் / பிளாக்ஷிப் போன்களை போன்ற ஸ்டைலான டிசைனை கொண்டு உள்ளது.
இரண்டாவது காரணம் - பகல் நேங்களில் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப் அட்டகாசமான அவுட்புட்களை வழங்குகிறது. இது ஓஐஎஸ் ஆதரவு உடனான 50எம்பி சோனி எல்ஒய்டி-600 பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. மூன்றாவது காரணம் - இதன் விவிட் டிஸ்பிளே. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2100 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67-இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
நான்காவது மற்றும் கடைசி காரணம் - இதன் திடமான பேட்டரி மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட். இதற்கு முன் வெளியான எந்தவொரு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனிலும் இல்லாத அளவிலான பெரிய 5500எம்ஏஎச் பேட்டரி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. இது 80W சூப்பர்வூக் ஆதரவுடன் வருகிறது. கூடவே இது 5W ரிவர்ஸ் சர்ஜிங்கிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது. அதாவது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை வைத்து உங்களுடைய மற்ற டிவைஸ்களை சார்ஜ் செய்ய முடியும்!
லிங்க் வெளிப்படுத்தல்: இந்த வலைத்தளத்தில் உள்ள இணைப்பு லிங்க்குகள் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!


Click it and Unblock the Notifications