அமேசான் அதிரடி.. 80W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் பிளாக் ஃப்ரைடே (Black Friday) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் கம்மி விலையில் விற்பனை செயப்படுகின்றன. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ லைட் 5ஜி (OnePlus Nord CE4 Lite 5G) ஸ்மார்ட்போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது அமேசான் சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1200 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.18799 விலையில் வாங்கிவிட முடியும்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி அம்சங்கள் (OnePlus Nord CE4 Lite 5G Specifications): 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே இந்த போனில் உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 × 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 6என்எம் 5ஜி எஸ்ஓசி (Octa Core Qualcomm Snapdragon 695 6nm 5G SoC) கொண்டுள்ளது இந்த போன். மேலும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டு வெளிவந்தது இந்த ஒன்பிளஸ் போன். அதுவும் இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த ஒன்பிளஸ் போன் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். அதாவது நீங்கள் 1 டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி போன். ஓஐஎஸ் (OIS), 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட், 10x டிஜிட்டல் ஜூமிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளன இந்த ரியர் கேமராக்கள். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ஒன்பிளஸ் போனில் உள்ளன.

5500mAh பேட்டரி பேட்டரி வசதி உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. 80W சூப்பர்வூக் (SuperVOOC) சார்ஜிங் வசதியும் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, அதேசமயம் இதன் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்து விட முடியும்.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. மேலும் சில்வர் (Super Silver) மற்றும் மெகா ப்ளூ (Mega Blue), அல்ட்ரா ஆரஞ்சு ( Ultra Orange) நிறங்களில் இந்த ஒன்பிளஸ் போன் வாங்க கிடைக்கிறது. இதுதவிர பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் இந்த ஒன்பிளஸ் போன் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








