விட்றாதீங்க.. AMOLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. தள்ளுபடி விலையில் OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையானது (Amazon Great Indian Festival Sale) நாளை (செப்டம்பர் 27) தொடங்க உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப், ஸ்பீக்கர்கள், கேமரா எனப் பல்வேறு சாதனங்களைத் தள்ளுபடி விலையில் வாங்க முடியும். அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி (OnePlus Nord CE4 Lite 5G) போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்.
அதாவது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ரூ.19,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் நாளை நடைபெற உள்ள சிறப்பு விற்பனையில் இந்த ஒன்பிளஸ் போனை கூப்பன் ஆஃபர் மற்றும் சலுகைகள் உடன் சேர்த்து ரூ.16,999 விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி அம்சங்கள் (OnePlus Nord CE4 Lite 5G Specifications): 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். மேலும் 2400 × 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 6என்எம் 5ஜி எஸ்ஓசி (Octa Core Qualcomm Snapdragon 695 6nm 5G SoC) சிப்செட் உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் போன்.
ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த ஒன்பிளஸ் போன் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். அதேபோல் IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது இந்த அட்காசமான ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். அதாவது நீங்கள் 1 டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் ஓஐஎஸ் (OIS), 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட், 10x டிஜிட்டல் ஜூமிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளன இந்த ரியர் கேமராக்கள். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன்.

5500mAh பேட்டரி பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 80W சூப்பர்வூக் (SuperVOOC) சார்ஜிங் வசதியும் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, அதேசமயம் இதன் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்து விட முடியும்.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. மேலும் சில்வர் (Super Silver) மற்றும் மெகா ப்ளூ (Mega Blue), அல்ட்ரா ஆரஞ்சு ( Ultra Orange) நிறங்களில் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications