Home
Mobile

விலை இவ்ளோ தானா.. 8000mAh பேட்டரி OnePlus Nord CE 6 மே 8 முதல் SALE.. OnePlus Nord CE 6 Lite மே 12 முதல் SALE!

ஒன்பிளஸ் நார்ட் 6 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தை தொடர்ந்து, இந்நிறுவனம் அதே சீரீஸின் கீழ் மேலும் 2 புதிய மாடல்களை வருகிற மே 7 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யவுள்ளது. அது ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 மற்றும் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் மாடல்கள் ஆகும்.

இவ்விரு ஸ்மார்ட்போன்களை மே 7 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு நிகழ்வு ஆனது ஒரு விர்ச்சுவல் ஈவென்ட் ஆக நடக்குமா அல்லது சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒன்பிளஸ் பேட் 4 மாடலை போல ஒரு பத்திரிக்கை வெளியீட்டின் மூலம் வெளியிடப்படுமா என்பது குறித்து எந்த விவரங்களும் இல்லை.

விலை இவ்ளோ தானா.. 8000mAh பேட்டரி OnePlus Nord CE 6 மே 8 முதல் SALE!

ஆனால் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 மற்றும் நார்ட் சிஇ 6 லைட் ஸ்மார்ட்போன்களின் ன் கலர் ஆப்ஷன்களும், சில முக்கிய அம்சங்களும், சுவாரசியமாக இவைகள் எப்போது விற்பனைக்கு வரும் என்கிற தேதிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன.

அதன்படி நார்ட் சிஇ 6ஆனது ஃப்ரெஷ் ப்ளூ, லூனார் பேர்ல் மற்றும் பிட்ச் பிளாக் ஆகிய 3 கலர்களிலும். அதே சமயம், ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட், விவிட் மின்ட் மற்றும் ஹைப்பர் பிளாக் ஆகிய 3 கலர்களிலும் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் மே 7 அறிமுகத்தை தொடர்ந்து ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 ஸ்மார்ட்போன் ஆனது மே 8 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் மற்றும் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் ஸ்மார்ட்போன் ஆனது மே 12 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இவ்விரு ஸ்மார்ட்போன்களின் விலைகள் குறித்த விவரங்களும் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன. அதன்படி - ஒன்பிளஸ் நார்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.24,999 என்கி ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது நிலவும் மெமரி சிப் பற்றாக்குறையால் அதன் அடுத்த மாடலின் விலை கொஞ்சம் உயரக்கூடும்.

ஒருவேளை அறிமுக சலுகைகளுடன், ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 ஸ்மார்ட்போனின் அதன் விலை ரூ.30,000-க்கும் குறைவான பிரிவில் இடம்பெறலாம். இதற்கிடையில் பழைய ஒன்பிளஸ் நார்ட் சிஇ 4 லைட் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,000-க்கும் குறைவான பிரிவில் வந்தது. ஆனால் அதன் அடுத்த மாடல் (ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட்) ரூ.25,000-க்கும் குறைவான பிரிவுக்கு கொண்டு செல்லக்கூடும். சரியான விலைகள் மே 7-ஆம் தேதி நடைபெறும் அறிமுக நிகழ்வின் போது வெளியிடப்படும்.

ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட்டில் உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்: நார்ட் சிஇ 6 லைட் ஸ்மார்ட்போன் ஆனது டைமென்சிட்டி 7400 அப்பெக்ஸ் சிப்பில் இயங்கும் என்பதை இந்த ஸ்மார்ட்போனுக்காக உருவாக்கப்பட்ட மைக்ரோசைட் வெளிப்படுத்துகிறது.

இது 10,30,000-க்கும் அதிகமான ஆன்டுடு (AnTuTu) ஸ்கோரை பெற்றுள்ளதாகவும் ஒன்பிளஸ் நிறுவனம் கூறுகிறது. ஆக இந்த ஸ்மார்ட்போன், இந்த விலை பிரிவில் உள்ள மற்ற உயர் நடுத்தர சிப்களுக்கு இணையான ஒரு சிப்பை பெறுகிறது

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஆக்சிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) உடன் வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது . மேலும், உள் சோதனைகளின் அடிப்படையில், ஐந்து ஆண்டுகள் வரை தடையற்ற பயன்பாட்டை இது வழங்கும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் கூறுகிறது.

கேமிங் செயல்திறன் ஓரளவு யதார்த்தமாக உள்ளது. சப்வே சர்ஃபர்ஸ் போன்ற எளிமையான கேம்களில் இந்த ஃபோனால் 144fps வேகத்தை எட்ட முடியும், ஆனால் BGMI மற்றும் கால் ஆஃப் டூட்டி மொபைல் போன்ற அதிக செயல்திறன் தேவைப்படும் கேம்களில் இதன் வேகம் 90fps ஆகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஒரு வழக்கமான ஹோல்-பஞ்ச் கட்அவுட் கொண்ட ஒரு பிளாட் ஆன பேனலாக இருக்கும். பேட்டரியை பொறுத்தவரை இது 7000mAh பேட்டரியை கொண்டிருக்கும். இது இரண்டு நாட்கள் வரை பயன்பாட்டையும், 1,200 சார்ஜ் சுழற்சிகளுக்கு பிறகும் பேட்டரி ஹெல்த்தை சீராக வைத்திருக்கும் என கூறப்படுகிறது.

கடைசியாக கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் ஆனது ஒரு எளிமையான கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். இதில் டூயல் ரியர் செட்டப் இடம்பெறும். அதில் 50MP ப்ரைமரி சென்சார் உள்ளது. மேலும் இது 4கே வீடியோ மற்றும் 4கே மோஷன் போட்டோக்களை ஆதரிக்கும்.

ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 ஸ்மார்ட்போனில் உறுதிசெய்யப்பட்ட அம்சங்கள்:
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3200Hz டச் சாம்பிளிங் ரேட்டுடன் கூடிய 6.78-இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே
- நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP66, IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 பிராசஸர்
- 8,000mAh பேட்டரி, 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்
- 50MP ப்ரைமரி கேமரா
- 32MP செல்பீ கேமரா

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 6 OnePlus Nord CE 6 Lite Round Up Price Specifications May 7 Launch Sale From May 8
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X