ரூ.25000 பட்ஜெட்டில் புது OnePlus போன்.. 5ஜி, 8000mAh பேட்டரி, 50MP OIS கேமரா, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் அடுத்த புதிய ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 (OnePlus Nord CE 6) மாடலின் அறிமுக தேதியை அறிவித்த கையோடு நார்ட் சிஇ 6 ஸ்மார்ட்போனின் கேமராக்கள், சாஃப்ட்வேர்மற்றும் ஸ்பீக்கர்கள் தொடர்பான முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் (OnePlus Nord CE 6 Lite) உடன் சேர்த்து வருகிற மே 7 ஆம் தேதி அன்று இந்தியாவில் வெளியிடப்படவுள்ளது. மாடல் பெயர் குறிப்பிடுவது போலவே நார்ட் சிஇ 6 ஆனது, இந்தியாவில் ரூ.24,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகமான, மிகவும் பிரபலமான நார்ட் சிஇ 5 மாடலின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் மாடலாக வருகிறது.

ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 ஸ்மார்ட்போனில் உறுதி செய்யப்பட்டுள்ள அம்சங்கள்: இது டூயல்-ஆக்சிஸ் ஓஐஎஸ் (OIS) ஆதரவு கொண்ட 50எம்பி ப்ரைமரி கேமராவை கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஓஐஎஸ் ஆதரவு இருப்பதால், இது கூர்மையான மற்றும் விரிவான புகைப்படங்களை (குறிப்பாக குறைந்த ஒளி நிலைகளில்) எடுக்க உதவும்.
இருப்பினும் ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது சரியான சென்சார் குறித்த விவரங்களை வெளியிடவில்லை. இந்த இடத்தில் நார்ட் சிஇ 5 மாடல் ஆனது 1/2-இன்ச் சென்சார் கொண்ட 50எம்பி LYT600 ப்ரைமரி கேமராவை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது ரூ.25,000 விலையில் ஒரு சிறப்பான (கேமரா போன்) தேர்வாக உள்ளது. ஆக இதேபோன்ற ஒரு நல்ல கேமராவை நார்ட் சிஇ 6 மாடலும் பெறலாம்.
நார்ட் சிஇ 6 கேமராக்களின் மற்றொரு முக்கிய சிறப்பம்சம் 4கே வீடியோ பதிவு ஆதரவாகும். இந்த ஸ்மார்ட்போன், அதன் ப்ரைமரி மற்றும் செல்பீ கேமரா ஆகிய இரண்டிலும் 4கே வீடியோ பதிவு ஆதரவை பெற உள்ளது. இது ஆன்லைனில் பதிவிட அல்லது ரீல்ஸ் அல்லது ஷார்ட்ஸ் உருவாக்க தேவையான விரிவான வீடியோ காட்சிகளுக்கு வழி வகுக்கிறது.
மேலும், முன்பக்க கேமராவில் ஆட்டோஃபோகஸ் ஆதரவுடன் கூடிய 32எம்பி சென்சார் இடம்பெறும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில், அதிக விலை கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) மற்றும் ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஆகிய இரண்டிலும் கூட ஆட்டோஃபோகஸ் உடன் கூடிய 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. ஆக நார்ட் சிஇ 6 மூலம் ஒன்பிளஸ் நிறுவனம் மலிவு விலையில் உயர்தர அம்சங்களை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
மேலும் எதிர்பார்த்தபடியே, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 ஸ்மார்ட்போன் ஆனது நிறுவனத்தின் பிரத்யேக கஸ்டம் ஸ்கின்னான ஆக்சிஜன்ஓஎஸ் 16 இல் இயங்கும். ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட இந்த சாஃப்ட்வேரில், ஃப்ளக்ஸ் தீம்ஸ் வழியாக லாக்ஸ்கிரீன் மற்றும் ஹோம்ஸ்கிரீனை கஸ்டமைஸ் செய்யும் பொதுவான விருப்பங்களை தவிர, ஏஐ போர்ட்ரெய்ட் க்ளோ, ஏஐ பெர்ஃபெக்ட் ஷாட், ஏஐ எரேசர், ஏஐ அன்ப்ளர், ஏஐ ரிஃப்ளெக்ஷன் எரேசர், ஏஐ டீடெயில் பூஸ்ட் மற்றும் ஏஐ ரீஃப்ரேம் போன்ற ஏஐ-பவர்டு எடிட்டிங் டூல்களும் இடம்பெறும்.
இந்த அம்சங்கள் அனைத்தும் இணைந்து ஒரு முழுமையான அனுபவத்தை வழங்குவதோடு, நோர்ட் சிஇ 6 மூலம் எடுக்கப்படும் படங்களின் தரத்தையும் கணிசமாக மேம்படுத்தும். சர்க்கிள் டு சர்ச் மற்றும் ஜெமினி லைவ் உள்ளிட்ட வழக்கமான கூகுள் ஏஐ தொகுப்பும் இதன்கீழ் வழங்கப்படும். இது பயனர்கள் தகவல்களை ஒரே பார்வையில் உடனடியாக தேட உதவும். அதுமட்டுமின்றி, சமீபத்தில் ஆக்சிஜன்ஓஎஸ் 16 ஓஎஸ்-இல் அறிமுகமான மேம்படுத்தப்பட்ட உள்ளமைக்கப்பட்ட வீடியோ மற்றும் ம்யூசிக் எடிட்டிங் டூல் போன்ற சில புதிய அம்சங்களும் இடம்பெறும்.
கடைசியாக, கடந்த ஆண்டு வெளியான நார்ட் சிஇ மாடலில் நீக்கப்பட்டிருந்த டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை, ஒன்பிளஸ் நிறுவனம் நார்ட் சிஇ 6 மாடலில் மீண்டும் சேர்த்துள்ளது. 300 சதவீத அல்ட்ரா வால்யூம் மோட் உதவியுடன், கேம் விளையாடும் போது மற்றும் திரைப்படங்களை பார்க்கும்போது நார்ட் சிஇ 6 ஸ்மார்ட்போனானது ஒரு ஆழ்ந்த சவுண்ட் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும்.
இதில் பெரிய 8,000mAh பேட்டரி இடம்பெறும் என்பதையும் ஒன்பிளஸ் ஏற்கனவே உறுதி செய்துள்ளது. இது 10 மணி நேரம் வரை பிஜிஎம்ஐ-ஐயும், 30 மணி நேரம் வரை யூட்யூப்-ஐயும் இயக்கும் என்று கூறப்படுகிறது. இது நார்ட் சிஇ 5 மாடலில் உள்ள 7,100mAh பேட்டரியை விட ஒரு குறிப்பிடத்தக்க மேம்பாடு ஆகும்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? என்ன விலைக்கு வரலாம்?
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட்
- 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 1.5K டிஸ்பிளே
- குறிப்பிட்ட கேம்களில் 144FPS கேமிங் ஆதரவு
- ரூ.25,000 - ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்


Click it and Unblock the Notifications