64எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் அசத்தலான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன்.!
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை ஜூன் 10-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை ஜூன் 11-ம் தேதி முதல் முன்பதிவு செய்யமுடியும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவரும்.

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி 5ஜி சிப்செட் வசதியுடன் அட்ரினோ 619ஜிபியுஆதரவும் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன்.மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த புதிய சாதனம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி மெமரி வசதி இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி பயன்படுத்தஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி எனப் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது இந்த புதிய
ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த்
சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும்
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனில் வைஃபை, புளூடூத் 5.1, என்எப்சி, ஜிபிஎஸ், க்ளோனாஸ், நாவிக், இரட்டை சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன. மேலும் பட்ஜெட் விலையில் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல்.


Click it and Unblock the Notifications