ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.!

|

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஏற்கனவே இருமுறை சிஸ்டம் அப்டேட் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்போது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி சாதனத்திற்கு OxygenOS 11.0.3.3 அப்டேட் கிடைக்கத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக செல்பீ கேமரா துல்லியமாக செயல்படும் வகையில் மற்றும் சிறந்த இணைய பாதுகாப்பை உறுதி
செய்யும் வகையில் இந்த அப்டேட் கிடைக்கத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 5ஜி பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடல். இந்தியாவில் கூடிய விரைவில் 5ஜி சேவை வரும் என்பதால் இந்த ஸ்மார்ட்போன்
சரியான விலையில் 5ஜி உட்பட அனைத்து அமசங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் OxygenOS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 30டி பிளஸ் வார்ப் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். எனவே 30 நிமிடங்களில் 70 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.
மேலும் Blue Void (matte), Charcoal Ink (glossy), Silver Ray நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த
சாதனம்.

5 ஜி, டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 அ / பி / ஜி / என் / ஏசி, டூயல் பேண்ட், வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், க்ளோனாஸ், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி
ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி விலை
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடலின் விலை ரூ.22,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடலின் விலை ரூ.24,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடலின் விலை ரூ.27,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 5G Received new software updates: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X