ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.!
இந்தியாவில் மிகவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பட்ஜெட் விலைக்கு தகுந்தபடி அனைத்து அமசங்களுடன் வெளிவந்துள்ளது இந்த சாதனம். மேலும் ரெட்மி, விவோ ஸ்மார்ட்போன்களை விட தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த பட்ஜெட் விலை ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது
இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 750 5ஜி பிராசஸர்
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 5ஜி பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடல். இந்தியாவில் கூடிய விரைவில் 5ஜி சேவை வரும் என்பதால் இந்த ஸ்மார்ட்போன் சரியான விலையில் 5ஜி உட்பட அனைத்து அமசங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் OxygenOS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைஅடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

64எம்பி பிரைமரி லென்ஸ்
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

4500 எம்ஏஎச் பேட்டரி
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 30டி பிளஸ் வார்ப் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். எனவே 30 நிமிடங்களில் 70 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் Blue Void (matte), Charcoal Ink (glossy), Silver Ray நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த சாதனம்.

5 ஜி, டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 அ / பி / ஜி / என் / ஏசி, டூயல் பேண்ட், வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், க்ளோனாஸ், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜிஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி விலை
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடலின் விலை ரூ.22,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடலின் விலை ரூ.24,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடலின் விலை ரூ.27,999-ஆக உள்ளது.

அட்டகாசமான சலுகைகள்
இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை இன்று முதல் முன்பதிவு செய்ய முடியும். அதேபோல் எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டு அல்லது ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகள் மூலம் இந்த போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி சலுகைகள் கிடைக்கும். பின்பு ஜியோ நிறுவனம் சார்பில் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி சாதனத்திற்கு குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications