மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. 7000mAh பேட்டரி.. 256ஜிபி மெமரி.. புது OnePlus போன் ரெடி.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5) ஸ்மார்ட்போனை வரும் ஜூலை மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. கீக்பெஞ்சின் தரவுத்தளத்தில் இந்த புதிய ஒன்பிளஸ் போன் CPH2719 என்ற மாடல் நம்பர் உடன் காணப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்டபோனின் முக்கிய விவரக்குறிப்புகள் கூட வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நோர்ட்சிஇ 5 அம்சங்கள் (OnePlus Nord CE 5 specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிளாட் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட்சிஇ 5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஒன்பிளஸ் போன் மீடியாடெக் டைமக்சிட்டி 8350 (MediaTek Dimensity 8350) சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது டைமன்சிட்டி சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட்சிஇ 5 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐபி64 ரேட்டிங் உடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிமைரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராவுடன் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும்.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 (OxygenOS 15)மூலம் இந்த ஒன்பிளஸ் நோர்ட்சிஇ 5 ஸ்மார்ட்போன் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7000mAh பேட்டரி வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட்சிஇ 5 போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W சார்ஜிங் வசதியும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட்சிஇ 5 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட வசதிகளும் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








