இதுக்கு தானே வெயிட் பண்ணோம்.. 7100mAh பேட்டரி உடன் புதிய OnePlus போன்.. இந்தியர்களே பீ ரெடி!
ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) மாடல்களின் உலகளாவிய வெளியீட்டை தொடர்ந்து, சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் அதன் புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் சீரிஸை வெளியிட தயாராகி வருகிறது. அது ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரிஸ் (OnePlus Nord 5 Series) ஸ்மார்ட்போன்கள் ஆகும்.
இதன் கீழ் முதலில் ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5) ஆகிய மாடல்கள் அறிமுகமாகும் என்றும், பின்னர் லைட் (Lite) வேரியண்ட் சேர்க்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவின் பிஐஎஸ் (BIS) சான்றிதழ் வலைத்தளத்தில் தோன்றியுள்ளது. ஆக இதன் இந்திய அறிமுகம் கூடிய விரைவில் நடக்கும் என்பது போல் தெரிகிறது.

ஆரம்பத்தில் இது 2025 மே மாதத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இந்த சமீபத்திய அப்டேட் இது 2025 ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என்று சுட்டிக்காட்டுகிறது. டிப்ஸ்டர் டெபயன் ராய், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனை பற்றிய சில முக்கிய விவரங்களையும் வெளியிட்டுள்ளார்.
ராயின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான FHD+ பிளாட் OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக்டைமன்சிட்டி 8350 சிப்செட் உடன் வரும். எல்லாவற்றை விட முக்கியமாக இது 80W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் 7100mAh பேட்டரியை பேக் செய்யும்.
கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா செட்டப்பில் சோனியின் லைட்டியா LYT-600 சென்சார் உடனான 50எம்பி பிரைமரி கேமரா மற்றும் சோனி IMX355 சென்சார் உடனான 8எம்பி அல்ட்ராவைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும். முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம்
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 8ஜிபி ரேம், 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், ஒரு ஹைப்ரிட் சிம் ஸ்லாட், ஒரு ஐஆர் பிளாஸ்டர் மற்றும் ஒரு சிங்கிள் ஸ்பீக்கர் செட்டப் ஆகியவைகளை கொண்டிருக்கலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 14 உடன் இயங்குகிறது.
ப்ராசஸரை பொறுத்தவரை, இது ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Snapdragon 7 Gen 3 Chipset) மற்றும் 8ஜிபி LPDDR4x ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கேமிங்கிற்கான எக்ஸ்-ஆக்சிஸ் நேரியல் மோட்டார் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் சோனி LYT600 சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் சோனி IMX355 அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ சென்சார் உள்ளது.
ஐபி54 ரேட்டிங், ஹை-ரெஸ் ஆடியோ ஆதரவு உடனான டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் உடன் வரும் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5500mAh பேட்டரியை கொண்டுள்ளது. 15 நிமிட சார்ஜிங்கில் இது ஒரு நாள் முழுவதுமான பேட்டரி லைஃப்பை வழங்குவதாக கூறப்படுகிறது, அதேசமயம் வெறும் 29 நிமிடங்களில் 1 முதல் 100% சார்ஜ் ஆகிவிடும்.


Click it and Unblock the Notifications








