திடீர் டிமாண்ட்.. 7100mAh பேட்டரி கொண்ட லேட்டஸ்ட் OnePlus மீது டிஸ்கவுண்ட்.. யாரு விடுவா.. எந்த மாடல்?
அடுத்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனிற்கு காத்திருந்தால்.. நீங்கள் அடுத்த சில மாதங்களுக்கு காத்திருக்க வேண்டும். ஏனென்றால் ஒன்பிளஸ் 15 தான் அடுத்த அறிமுகமாக இருக்கும் (ஒன்பிளஸ் 14 வராது - எது வேற கதை). மேலும் ஒன்பிளஸ் 15 முதலில் சீனாவில் அறிமுகமாகும்; இந்தாண்டு டிசம்பர் மாத வாக்கில் வெளியாகலாம்.
அதன் பின்னர் 2026 ஜனவரி மாத வாக்கில் இந்தியாவிற்கு வரும். ஒன்பிளஸ் 13 சீரீஸில் நாம் பார்த்த அம்சங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அப்டேட்களை நாம் ஒன்பிளஸ் 15 சீரீஸில் எதிர்பார்க்கலாம். ஆனால் அதுவரை காத்திருக்க முடியாதவர்கள் - லேட்டஸ்ட் ஆக அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை கருத்தில் கொள்ளலாம். அதிலும் உங்களுக்கு பட்ஜெட் சிக்கல் இருந்தால்.. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 மாடலை கருத்தில் கொள்ளலாம்!

ஏனென்றால் தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக, ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட்டின் கீழ் ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் (OnePlus Nord 5 Specifications and Features): டூயல் சிம் ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் ஆக்சிஜன் ஓஎஸ் 15 (OxygenOS 15) ஸ்கின் கொண்டு இயங்குகிறது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான சற்றே சிறிய 6.77-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இந்த போன் 12GB வரை LPDDR5x RAM உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 8350 அபெக்ஸ் (MediaTek Dimensity 8350 Apex) சிப்செட் கொண்டு இயங்குகிறது.
கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை கொண்டுள்ளது. இது சோனி LYT-600 சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எப் /1.8 அபெர்க்ஷர் உடன் வருகிறது. ப்ரைமரி கேமராவுடன் எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில், இது OV08D10 சென்சார் மற்றும் எப்/2.0 அபெர்க்ஷர் உடன் கூடிய 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 5ஜி, 4ஜி LTE, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, NFC, GPS, NavIC மற்றும் USB Type-C போர்ட் ஆகியவைகளை வழங்குகிறது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு டிவைஸ்களை கட்டுப்படுத்த பயன்படுத்தக்கூடிய இன்ப்ரா ரெட் (IR) டிரான்ஸ்மிட்டரும் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் ஆனது 7,100mAh பேட்டரியை கொண்டுள்ளது, இது சேர்க்கப்பட்ட அடாப்டருடன் 80W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கடைசியாக இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP65 ரேடிங்கையும் கொண்டுள்ளது. அளவீட்டில் இது 163.5×76×8.2மிமீ உள்ளது மற்றும் எடையில் 199 கிராம் உள்ளது.
ஒன்பிளஸ் 14 ஏன் அறிமுகம் ஆகாது? கிழக்கு ஆசிய கலாச்சாரங்களில், குறிப்பாக சீனா, ஜப்பான், கொரியா மற்றும் வியட்நாமில் காணப்படும் டெட்ராஃபோபியா காரணமாக, அதாவது 4 என்கிற எண்ணின் மீதான பயம் அல்லது வெறுப்பு காரணமாக.. ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 14 மாடலை வெளியிடாமல் நேரடியாக ஒன்பிளஸ் 15 மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. மேற்குறிப்பிட்ட நாடுகளில் உள்ள மொழிகளில் நான்காம் எண்ணுக்கான சொல் ஆனது மரணம் (Death) என்கிற வார்த்தையுடன் மிகவும் ஒத்திருப்பதால் இந்த பயம் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








