இப்படி ஒரு OnePlus போன் சீனாவில் கூட அறிமுகம் ஆனதில்லை.. இவ்ளோ கம்மி பட்ஜெட்டில் 7100mAh பேட்டரி-ஆ!
கிட்டத்தட்ட எல்லா பெரிய பிராண்டுகளுமே, அடுத்த அடுத்த வாரங்களில் அல்லது மாதங்களில், 7000எம்ஏஎச் அல்லது அதற்கும் மேலான பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டுவைத்த ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனிற்கு நன்றி. இது 7300எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இதனை தொடர்ந்து ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போன் 7200எம்ஏஎச் உடன் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, ஷாவ்மீ 16 ஸ்மார்ட்போன் ஆனது 7000எம்ஏஎச் உடன் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த வரிசையில் ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமும் சேர்நதுள்ளது போல் தெரிகிறது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரலில் அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4) ஸ்மார்ட்போனின் அப்கிக்ரேடட் வெர்ஷன் ஆன ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5) ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என்றும், இது 7100எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகமாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனில் 5500எம்ஏஎச் தான் உள்ளது. இது உண்மையாக இருந்தால், ஒரு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் பேக் செய்யப்பட்ட மிகப்பெரிய பேட்டரி இதுவாக இருக்கும். இது ஒன்பிளஸ் ஏஸ் 5 (OnePlus Ace 5) ஸ்மார்ட்போனில் உள்ள 6415எம்ஏஎச் பேட்டரியை பின்னுக்கு தள்ளும்
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Snapdragon 7 Gen 4) அல்லது மீடியாடெக் டைமன்சிட்டி 8400 (MediaTek Dimensity 8400) சிப்செட் மூலம் இயக்கப்படலாம். இதை தாண்டி, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் பற்றி தற்போது அதிகம் தெரியவில்லை. ஆனால் இது 2025 மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (OnePlus Nord CE 4 Specifications): டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 14 உடன் இயங்குகிறது.
ப்ராசஸரை பொறுத்தவரை, இது ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Snapdragon 7 Gen 3 Chipset) மற்றும் 8ஜிபி LPDDR4x ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கேமிங்கிற்கான எக்ஸ்-ஆக்சிஸ் நேரியல் மோட்டார் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் சோனி LYT600 சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் சோனி IMX355 அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ சென்சார் உள்ளது.
ஐபி54 ரேட்டிங், ஹை-ரெஸ் ஆடியோ ஆதரவு உடனான டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் உடன் வரும் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5500mAh பேட்டரியை கொண்டுள்ளது. 15 நிமிட சார்ஜிங்கில் இது ஒரு நாள் முழுவதுமான பேட்டரி லைஃப்பை வழங்குவதாக கூறப்படுகிறது, அதேசமயம் வெறும் 29 நிமிடங்களில் 1 முதல் 100% சார்ஜ் ஆகிவிடும்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம் (OnePlus Nord CE 5 Price in India Expected)? இந்தியாவில் இது ரூ.29,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.26,999 க்கும் இந்தியாவில் அறிமுகமானது.


Click it and Unblock the Notifications