அதிருது இந்திய மார்க்கெட்.. 7100mAh பேட்டரி.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய OnePlus போன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன் ஆனது 2024 ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் மாடலும் இந்த மாதம் இறுதிக்குள் அல்லது அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன் ரூ.24,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 அம்சங்கள் (OnePlus Nord CE 5 specifications): ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 எஸ்ஒசி (Snapdragon 7 Gen 4 SoC) சிப்செட் அல்லது மீடியாடெக் டைமன்சிட்டி 8400 (MediaTek Dimensity 8400) சிப்செட் உடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
50எம்பி சோனி கேமராவுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) வசதி இந்த ஒன்பிளஸ் போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த போன் வெளிவரும் என கூறப்படுகிறது.
7100mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அதேபோல் மேம்பட்ட ஏஐ (AI) அம்சங்கள் இந்த ஒன்பிளஸ் போனில் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications