Home
Mobile

வாடா செல்லம்.. இந்தியாவே வெயிட்டிங்.. 7100mAh பேட்டரி.. சோனி கேமரா.. புது OnePlus போன் ரெடி.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5) ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது இந்த தற்போது TDRA சான்றிதழ் தளத்தில் CPH2719 என்ற மாடல் நம்பர் உடன் காணப்பட்டுள்ளது. எனவே வரும் வாரங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் ஆன்லைனில்கசிந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 அம்சங்கள்(OnePlus Nord CE 5 specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிளாட் ஒஎல்இடி (flat OLED) டிஸ்பிளேவுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

 வாடா செல்லம்.. இந்தியாவே வெயிட்டிங்.. 7100mAh பேட்டரி.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட்( MediaTek's Dimensity 8350 chipset) உடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

குறிப்பாக 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது

OIS ஆதரவு கொண்ட50எம்பி சோனி எல்ஒய்டி-600 (Sony LYT-600) கேமரா + 8எம்பி சோனி ஐஎம்எக்ஸ்355 ( Sony IMX355) அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் கேமரா அமைப்புடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) வசதி இந்த ஒன்பிளஸ் போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)ஆதரவுடன் இந்த போன் வெளிவரும் என கூறப்படுகிறது.

குறிப்பாக 7100mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அதேபோல் மேம்பட்ட ஏஐ (AI) அம்சங்கள் இந்த ஒன்பிளஸ் போனில் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, ரூ.25.000-க்கு கீழ் இந்த ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photo credit: notebookcheck

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 5 receives important certification: Could be launched soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X