இதுதான் புது OnePlus 5ஜி போன்.. சோனி கேமரா.. OLED டிஸ்பிளே.. 7100mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5) ஸ்மார்ட்போனை இந்த மாதம் இறுதியில் அல்லது வரும் மே மாதம் துவக்கத்தில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய ஒன்பிளஸ் போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது.
ஆன்லைனில் வெளியான படங்களில், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 தட்டையான பின்புற பேனலைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் ஓவல் வடிவ கட்அவுட்டுக்குள் டூயல் ரியர் கேமரா அமைப்பு கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் இந்த புதிய ஒன்பிளஸ் போன் குறைந்த எடையுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 அம்சங்கள் (OnePlus Nord CE 5 specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி 8350 (MediaTek Dimensity 8350) சிப்செட் உடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தரமான கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
அதேபோல் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இந்த ஒன்பிளஸ் போனில் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 (OxygenOS 15) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும்.

குறிப்பாக 7100mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அதேபோல் மேம்பட்ட ஏஐ (AI) அம்சங்கள் இந்த ஒன்பிளஸ் போனில் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
photo credit: smartprix


Click it and Unblock the Notifications