Home
Mobile

மிரள விடும் ஒன்பிளஸ்.. பட்ஜெட்ல 100W சார்ஜிங்.. 8GB ரேம்.. 50MP கேமரா.. புதிய 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 போனின் ஸ்டோரேஜ் விவரம் மற்றும் பல்வேறு முக்கிய அம்சங்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

மிரள விடும் ஒன்பிளஸ்.. பட்ஜெட்ல 100W சார்ஜிங்.. 8GB ரேம்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 அம்சங்கள் (OnePlus Nord CE 4 specifications): தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட்(Qualcomm Snapdragon 7+ Gen 3 chipset) வசதியுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் அட்ரினோ 732 ஜிபியு (Adreno 732 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன்ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 அறிமுகமாகும்.

அதேபோல் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு ஐஆர் பிளாஸ்டர் (IR blaster) ஆதரவு கொண்டுள்ளது ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஆனது 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளேவை (AMOLED display) கொண்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவம் வழங்கும்.

5500எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் போன். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (100W fast charging) வசதி உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே இந்த போனின் பேட்டரியை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மின்ட் (mint) மற்றும் கிரே (grey) நிறங்களில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. கனெக்டிவிட்டி பொறுத்தவரை, வைஃபை 6 ( Wi-Fi 6), புளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி(NFC), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB-C port) போன்றவை இதில் உள்ளன.

மிரள விடும் ஒன்பிளஸ்.. பட்ஜெட்ல 100W சார்ஜிங்.. 8GB ரேம்.. எந்த மாடல்?

16எம்பி செல்பி கேமரா உடன் இந்த அசத்தலான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவு இந்த போனில் உள்ளன. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளிவரும்.

குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.25,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 4 with 8GB RAM will be launched in India: check release date, specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X