OnePlus வேற ரகம்.. ரூ.25000 பட்ஜெட்ல 100W சார்ஜிங்.. 5500mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களும் காத்திருந்து வாங்கும்படியான பட்ஜெட்டில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, அமோலெட் டிஸ்பிளே, எச்டிஆர் கேமரா போன்ற பீச்சர்களுடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 போன் வெளியாகிறது.
இந்த போன் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 1 டிபி எஸ்டி சப்போர்ட், அமோலெட் டிஸ்பிளே போன்ற அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

அதோடு டிசைன் மற்றும் கலர் அம்சங்களும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7பிளஸ் ஜென் 3 4என்எம் மொபைல் சிப்செட் வருவதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், மார்கெட் வட்டாரங்களில் இந்த போனில் முழு அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் வெளியாகிவிட்டன.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 அம்சங்கள் (OnePlus Nord CE 4 Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7பிளஸ் ஜென் 3 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 7+ Gen 3 4nm Mobile) சிப்செட் மட்டுமல்லாமல், அட்ரினோ 732 ஜிபியு (Adreno 732 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உடன் கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) சப்போர்ட் வருகிறது. பிரீமியம் சென்சார்களுடன் 50 எம்பி மெயின் + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி-100 (Sony LYT-600 ) சென்சார் மற்றும் OIS சப்போர்ட் வருகிறது.

அதேபோல வைடு ஆங்கிள் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சார் வருகிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் சாம்சங் சென்சாருடன் வருகிறது. இந்த கேமராவை போலவே மிரளவிடும் பேட்டரி சிஸ்டம் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது. 100W சூப்பர்வூக் சார்ஜிங் மட்டுமல்லாமல், 5,500mAh பேட்டரி வருகிறது.
டியாகாங் கூலிங் சிஸ்டம் (Tiangong Cooling System) மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் கொண்டிருக்கிறது. இந்த பேட்டரி மூலம் வெறும் 15 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த நோர்ட் போனில் 6.74 இன்ச் (2772 × 1240 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே வருகிறது.
இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2150 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மாடலாகும். 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut) சப்போர்ட் உள்ளது. இந்த ஒன்பிளஸ் போனில் 2 வேரியண்ட்கள் இருக்கின்றன.
இந்தியாவில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கின்றன. 1 டிபிக்கான எஸ்டி கார்டு சப்போர்ட் வருகிறது. ரூ.25,000 பட்ஜெட்டில் இந்த போன் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எப்படி பார்த்தாலும் 100W சார்ஜிங், சோனி கேமரா, அமோலெட் டிஸ்பிளே கொண்ட ஒன்பிளஸ் போன் இந்த பட்ஜெட்டுக்கு வருவது முதல்முறையாகும். செலாடன் மார்பிள் (Celadon Marble) மற்றும் டார்க் குரோம் (Dark Chrome) ஆகிய 2 கலர்கள் கொண்டிருக்கிறது. டிசைனை பொறுத்தவைரியில், சீனாவில் வெளியான ஏஸ் 3வி மாடலை போலவே இருக்கிறது.


Click it and Unblock the Notifications








