Home
Mobile

ஏப்ரல் 1 உறுதி.. 100W சார்ஜிங்.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. புதிய OnePlus போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் தனது அடுத்த ஒன்பிளஸ் நோர்ட் போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 எனும் ஸ்மார்ட்போனை தான் இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போனின் அறிமுக தேதி மற்றும் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 அம்சங்கள் ( OnePlus Nord CE 4 specifications): 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 அறிமுகம் செய்யப்படும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும்.

ஏப்ரல் 1 உறுதி.. 100W சார்ஜிங்.. 50MP கேமரா..  புதிய OnePlus போன்..

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 chipset) வசதியுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் இந்த ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட். மேலும் அட்ரினோ 732 ஜிபியு (Adreno 732 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன்ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 அறிமுகமாகும்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியுடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 அறிமுகம் செய்யப்படும். அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் 5500எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (100W fast charging) வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரியை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

இன்-டிஸ்பிளே ஆப்டிகல் கைரேகை சென்சார் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன். மேலும் ஐஆர் பிளாஸ்டர் (IR blaster) ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக மேம்பட்ட பல்வேறு புதிய அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் கூறியுள்ளது.

ஏப்ரல் 1 உறுதி.. 100W சார்ஜிங்.. 50MP கேமரா..  புதிய OnePlus போன்..

வைஃபை 6 ( Wi-Fi 6), புளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி(NFC), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB-C port) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் மின்ட் (mint) மற்றும் கிரே (grey) நிறங்களில் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது அறிமுகம்? அதாவது வரும் ஏப்ரல் 1-ம் (April 1) தேதி மாலை 6.30 மணி அளவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 4 will be launched in India on April 1: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X