புதிய ஒன்பிளஸ் போனின் விலை இவ்ளோதானா! 100W சார்ஜிங்.. 8ஜிபி ரேம்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் எப்போதுமே தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. அதேபோல் இந்நிறுவனத்தின் போன்கள் தரமான அம்சங்களுடன் வெளிவருவதால் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது வரும் ஏப்ரல் 1-ம் தேதி இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். இந்நிலையில் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு ஆன்லைனில் விலை கசிந்துள்ளது.

அதன்படி இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.26,999 விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போனுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் ஏற்கனவே ஆன்லைனில் வெளியான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 அம்சங்கள் (OnePlus Nord CE 4 specifications): 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளேவை (AMOLED display) உடன் இந்த புதிய ஒள்பிளஸ் போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.
தரமான ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 chipset) உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 மாடல் வெளிவரும் பின்பு கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 732 ஜிபியு (Adreno 732 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஆனது 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. மேலும் 4கே வீடியோ பதிவு மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மின்ட் (mint) மற்றும் கிரே (grey) நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். அதேபோல் வைஃபை 6 ( Wi-Fi 6), புளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி(NFC), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB-C port) கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.


Click it and Unblock the Notifications








