மார்க்கெட்டே அதிர போகுது.. 80W சார்ஜிங்.. 50MP கேமரா.. இந்தியாவுக்கு வருகிறது புதிய OnePlus போன்.. எந்த மாடல்?
இந்தியாவில் சமீபத்தில் தான் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் (OnePlus Nord CE 4 Lite) எனும் ஸ்மார்ட்போன் மாடலையும் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட், 12ஜிபி ரேம், 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன் BIS சான்றிதழ் தளத்தில் காணப்பட்டது. எனவே வரும் வாரங்களில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE 4 Lite specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே ( AMOLED display) வசதியுடன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 ) வசதியுடன் இந்த ஒன்பிளஸ் அறிமுகம் செய்யப்படும். இது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU)கிராபிக்ஸ் கார்டு இதில் வருகிறது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
50எம்பி பிரைமரி கேமரா + அல்ட்ரா வைடு லென்ஸ் + டெப்த் சென்சார் என ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. மேலும் இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
குறிப்பாக அண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் சிறந்த ஆடியோ வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும்.
அதேபோல் 5500எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (80W charging) வசதி உள்ளது. குறிப்பாக இதை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன் ஆனது 5ஜி ஆதரவு, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவரும். மேலும் ரூ.23,000 பட்ஜெட்டில் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








