பக்கா மாஸ்.. இதுதான் புதிய OnePlus 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. 12ஜிபி ரேம்.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது BIS சான்றிதழ் தளத்தில் இந்த போன் காணப்பட்டது. அதன்பின்பு தற்போது இணையதளத்தில் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போனின் புகைப்படம் கசிந்துள்ளது. எனவே வரும் வாரங்களில் இந்த புதிய ஒன்பிளஸ் போன் இந்தியாவில் அறிமுகம் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.
அதாவது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போனின் புகைப்படம் முதல் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் தான் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக டூயல் ரியர் கேமரா மற்றும் டூயல் பிளாஷ் லைட்டுகள் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். பின்பு கருப்பு நிறத்தில் இந்த போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கனவே ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் அம்சங்கள் (OnePlus Nord CE4 Lite specifications): 6.67-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், இன்-டிஸ்பிளே கைரேகை ரீடர் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன் இந்தியாவில் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும். அதேபோல் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் (Snapdragon 6 gen 1 SoC) வசதியுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன் வெளிவரும். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் இந்த போனுக்கு அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன்.
அதேபோல் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போனின் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

5500எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவரும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (80W charging) வசதி உள்ளது. குறிப்பாக இதை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
குறிப்பாக 5ஜி, யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய ஒன்பிளஸ் போன் இந்தியாவில் ரூ.23,000 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
Photo courtesy: Gadget Bits, X, OnePlus


Click it and Unblock the Notifications