Home
Mobile

ரூ.20,000-க்கும் கம்மி.. இந்த OnePlus Phone-க்கு தான் பலரும் வெயிட்டிங்.. 5G, 5500mAh பேட்டரி, 50MP கேமரா!

ஏற்கனவே ரூ.69,999-க்கு வாங்க கிடைக்கும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் அல்லது ஜூன் 6 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் 12 க்ளேஷியஸ் ஒயிட் ஸ்பெஷல் எடிஷன் மட்டுமின்றி.. ரூ.40,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் கிடைக்கும் ஒன்பிளஸ் ஆர் சீரிஸ் மாடல்களை வாங்குவது கூட சிரமம் தான். பட்ஜெட்-விலையில் வரும் ஒன்பிளஸ் நோர்ட் சீரிஸ் மாடல்கள் மீதுதான் உங்களுக்கு ஒரு கண் இருக்கிறது என்றால்.. விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி (OnePlus Nord CE 4 Lite 5G) மாடல் 100% உங்களுக்கானது தான்!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி (OnePlus Nord CE 4 Lite 5G) ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஏப்ரல் 2023 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இது எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

ரூ.20,000-க்கும் கம்மி.. இந்த OnePlus Phone-க்கு பலரும் வெயிட்டிங்!

என்ன விலைக்கு வரும்? நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான சஞ்சு சௌத்ரி (X: @saaaanjjjuuu) எக்ஸ் தளத்தில் பதிவிட்ட போஸ்ட்டின்படி, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போன் 2024 ஜூன் மாதமே அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே எக்ஸ் போஸ்ட்டில் இன்னொரு புதிய நோர்ட் சீரீஸ் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G) மாடலானது 2024 ஜூலை மாத வாக்கில் ரூ.31,999 க்கு இந்தியாவில் அறிமுகமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகமொத்தம் அடுத்தடுத்த மாதங்களில் 2 புதிய ஒன்பிளஸ் போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? டிப்ஸ்டர் சஞ்சு சௌத்ரியின் கூற்றுப்படி, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.67-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை (FHD+ AMOLED Display) கொண்டிருக்கும். மேலும் இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் (Qualcomm Snapdragon 6 Gen 1 SoC), 5500எம்ஏஎச் பேட்டரி மற்றும் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் ஆகியவற்றுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 (Android 14) அடிப்படையிலான ஆப்ரேட்டிங் சிஸ்டம் உடன் அனுப்பப்படலாம். இது 3 வருட செக்யூரிட்டி அப்டேட்களுடன் (Security Updates) 2 ஆண்டுகளுக்கான ஓஎஸ் அப்டேட்களையும் (OS Updates) பெறலாம். கேமராவை பொறுத்தவரை இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual Rear Camera Setup) கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் 50-மெகாபிக்சல் சென்சார் மற்றும் 2-மெகாபிக்சல் டெப்த் சென்சார் இடம்பெறலாம். முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் சென்சார் பேக் செய்யப்படலாம்.

ஒன்பிளஸ் 12 க்ளேஷியஸ் ஒயிட் ஸ்பெஷல் (OnePlus 12 Glacial White) எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை: ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய கலர் ஆப்ஷனின் சிங்கிள் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.64,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா (Amazon India), ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (OnePlus.in Website), ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள அதிகாரப்பூர்வ பார்ட்னர் ஸ்டோர்களில் ஜூன் 6 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 4 Lite 5G Price in India Major Specifications India Launch Timeline Leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X