இன்று களமிறங்கும் ஒன்பிளஸ் 5ஜி போன்.. சோனி கேமரா.. 80W சார்ஜிங்.. 512ஜிபி மெமரி.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி (OnePlus Nord CE 4 Lite 5G) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக 50எம்பி டூயல் ரியர் கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட், அமோலெட் டிஸ்பிளே மற்றும் பல்வேறு அசத்தலான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும். மேலும் இந்த ஒன்பிளஸ் போனின் வெளியீட்டு நிகழ்வை லைவ்ஸ்ட்ரீம் பார்ப்பது எப்படி? இது என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்பது குறித்து தகவல்களை இங்கே பார்க்கலாம்.
லைவ்ஸ்ட்ரீம் பார்ப்பது எப்படி? ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் ஸ்மார்ட்போன் இன்று மாலை 7 மணிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போனின அறிமுக நிகழ்வு ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி அம்சங்கள் (OnePlus Nord CE 4 Lite 5G specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் (Snapdragon 695 chipset) வசதியுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன் வெளிவரும். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் இந்த போனுக்கு அட்ரினோ 710 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன்.
அதேபோல் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன் இந்தியாவில் வெளிவரும் ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
6.67-இன்ச் அமோலெட் டிஸ்பிளே (amoled display) வசதியுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2100 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. எனவே இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
50எம்பி சோனி எல்ஒய்டி-600 (Sony LYT-600) பிரைமரி கேமரா + 2எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5500எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (80W charging) வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்து விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 5ஜி, யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.24,999 விலையில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications