ஜூன் 24 உறுதி.. சோனி கேமரா.. 80W சார்ஜிங்.. இந்தியாவுக்கு வரும் OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?
இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி (OnePlus Nord CE 4 Lite 5G) போன் வரும் ஜூன் 24-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும். 5500எம்ஏஎச் பேட்டரி, 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 50எம்பி கேமரா மற்றும் பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி அம்சங்கள் (OnePlus Nord CE 4 Lite 5G specifications): 6.67-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2100 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன் இந்தியாவில் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும். அதேபோல் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
தரமான ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் (Snapdragon 6 gen 1 SoC) வசதியுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன்அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் இந்த போனுக்கு அட்ரினோ 710 ஜிபியுகிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன்.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி போன் 50எம்பி சோனி எல்ஒய்டி-600 (Sony LYT-600) பிரைமரி கேமரா + 2எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் போனின் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

அதேபோல் 5500எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவரும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (80W charging) வசதி உள்ளது. குறிப்பாக இதை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஒன்பிளஸ் போன் இந்தியாவில் ரூ.23,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications