Home
Mobile

அடிச்சான் பாரு OnePlus.. கனவுல கூட நினைக்காத விலைக்கு புதிய Nord சீரீஸ் போன்.. என்ன மாடல்? என்ன விலை? |

6100எம்ஏஎச் பேட்டரியுடன் தயார் ஆகும் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த அப்டேட்கள் ஒருபக்கம் இருக்க.. ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்த வாரம் இந்தியாவில் தனது புதிய நோர்ட்-சீரீஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. அது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி (OnePlus Nord CE 4 Lite) ஸ்மார்ட்போன் ஆகும். இது ஜூன் 18 ஆம் தேதி, இரவு 7 மணிக்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கிடையில் இந்த ஸ்மார்ட்போனின் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் அவற்றின் விலை நிர்ணயம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு அறிமுகமான நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி-ன் அப்கிரேடட் வெர்ஷன் ஆக வரும் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி ஆனது 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் என்பதும், இது மெகா ப்ளூ கலர் ஆப்ஷனிலும் வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர்த்து வேறு சில கலர் ஆப்ஷன்களும், கூடவே ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களும் அறிவிக்கப்படலாம் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

OnePlus: கனவுல கூட நினைக்காத விலைக்கு புதிய Nord சீரீஸ் போன்!

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி ஆனது ரூ.20,000-க்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஆனது தற்போது ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட், பழைய நோர்ட் சிஇ 3 லைட் உடன் ஒற்றுப்போகும் ஒரு விலையாக இருந்தாலும் கூட, இது வரவேற்கத்தக்க ஒரு விலை தான்!

ஏனென்றால், ஒப்பீட்டளவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி ஆனது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி-ஐ விட மேம்படுத்தப்பட்டதாக இருக்கும்; சில கூடுதல் அம்சங்களை, லேட்டஸ்ட் அம்சங்களை நிச்சயம் பேக் செய்யும். ஆக எப்படி பாத்தாலும் ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி மாடலுக்கான ஒரு சிறந்த விலையாக இருக்கும்!

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் அல்லது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் கொண்டு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமராவை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்ய வாய்ப்புள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம். இது 80W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் 5500mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் 3 வருட செக்யூரிட்டி அப்டேட்களுடன் இரண்டு வருட ஓஎஸ் அப்டேட்களை பெற வாய்ப்புள்ளது.

6100எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, அது ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆக இருக்கலாம். இதுவரையிலாக ஏஸ் ப்ரோ சீரிஸ் போன்கள் சீனாவில் மட்டுமே அறிமுகமாகி உள்ளன. ஆனால் ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ விஷயத்தில் அப்படி எதையும் உறுதியாக கூற முடியாது. இது வேறு பெயரின் கீழ் ஒன்பிளஸ் நோர்ட் சீரீஸின் கீழ் மற்ற சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படலாம். அல்லது வேறு ஏதாவது ஒரு ஒன்பிளஸ் மாடலில் 6100எம்ஏஎச் பேட்டரி பேக் செய்யப்படலாம்!

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 4 Lite 5G 8GB RAM 128GB Priced Below Rs 20000 India Launch on June 18
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X